முத்து நிலவே தித்திக்கின்றதே பாடல் வரிகள்

Movie Name
Time (1999) (டைம்)
Music
Ilaiyaraaja
Year
1999
Singers
Gopika Poornima, Devan
Lyrics
Palani Barathi

முத்து நிலவே யயயாஹ்..தித்திக்கின்றதே
நட்சத்திரமே யயயாஹ் கொட்டுகின்றதே
காற்றிலே கைகளால் ஓவியம் வரைகிறேன்
தேவதை நேரில் வந்தாளே.... ஹோய்..(முத்து)

ஹேய் சிரிக்குதே சிரிக்கும் மின்னல்
ஹேய் பறிக்குதே துடிக்கும் நெஞ்சை ஹே ஹேய்..
ஹேய் துடிக்குதே துடிக்கும் நெஞ்சம்
ஹேய் குளிக்குதே கொதிக்கும் ஆற்றில் ஹே ஹேய்...

கார்முகில் வண்ணன் குழலோசை கேட்கிறது
மாலே மணிவண்ணா..
ராதையின் உள்ளம் மணமாலை கோர்க்கிறது
மாலே மணிவண்ணா

வேய்ங்குழல் தேனோசை ஓசையில் ஓராசை
ஆசையில் பெண் கன்னம் பூத்ததே
என் நெஞ்சில் தில்லானா

என் நெஞ்சத்தில் நானா
முத்துமணி முத்துகளை கண்டுகொண்டேன்
ரத்தினங்கள் சிந்தியது நெஞ்சுக்குள்ளே
அங்குமிங்கும் எங்கெங்கும் நீதானா

தத்தித் தத்தி தங்க முகம் பச்சைக்கிளி
இறக்கைகளை தந்துவிடும் சொன்னபடி
நானந்த ஓவியம் கண்டு சிலையாய் ஆகிறேன்
வானவில்லின் வண்ணம் கண்டு
வெறும் மழையாய் ஆகிறேன்

நினைவிலே வாழ்ந்தவள் நேரிலே தோன்றினாள்
என்னுயிர் தீபத்தை விழியினால் தூண்டினாள்
கண்டு கொண்டேனே காலம் காலம் வென்றேனே
முத்து நிலவே யயயாஹ்..தித்திக்கின்றதே

என் பாதி என்பேனே சித்திரத்தில்
சிக்கியது உன் அழகு
தூண்டிலுக்கு தப்பியது கண்ணழகு
உன்னை விட்டு இங்கே நான் வாழ்வேனா

ரெண்டில் ஒன்று பக்கம் வந்து சொல்லிவிடு
தத்தளிக்கும் என் மனதை அள்ளி எடு
பூவுக்குள்ளே பூவுக்குள்ளே நாமும் வாழ்வோமா
ஆள் இல்லா ஆளே இல்லா தேசம் போவோமா

காதலை உண்ணலாம் காதலை உடுத்தலாம்
காதலை வாழலாம் காதலை ஆளலாம்
வேண்டும் என் அன்பே
போதும் போதும் என் என்பே....(முத்து)
 

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.