பூங்காற்றே கொஞ்சம் பாடல் வரிகள்

Last Updated: Sep 22, 2023

Movie Name
Friends (2001) (ப்ரெண்ட்ஸ்)
Music
Ilaiyaraaja
Year
2001
Singers
Hariharan
Lyrics
Palani Barathi
பூங்காற்றே கொஞ்சம் உண்மை சொல்ல வருவாயா
போராடும் நியாயம் சாட்சி சொல்லி போவாயா
மேகங்கள் கலையலாம் வானமே கலையுமா
உள்ளங்கள் கலங்கலாம் உண்மையே கலங்குமா
ஆறுதல் கூறாயோ அருகில் வந்து.

பூங்காற்றே கொஞ்சம் உண்மை சொல்ல வருவாயா
போராடும் நியாயம் சாட்சி சொல்லி போவாயா

அலைகளாய் ஆடுதே அன்பெனும் உள்ளங்களே
அனலிலே உருகுதே மெழுகு போல் சொந்தங்களே
பாடிடும் குயில் தோப்பில் யார் அம்பு எய்தார்
வீணையை விறகாக யார் இங்கு காண்பார்
காலமே உன் லீலையே இனி மாறுமோ!

பூங்காற்றே கொஞ்சம் உண்மை சொல்ல வருவாயா
போராடும் நியாயம் சாட்சி சொல்லி போவாயா

பறவைகள் கூடிடும் வசந்தமாய் ஓர் காலம்
பருவங்கள் மாறினால் பிரிந்திடும் ஓர் காலம்
மாலையில் பூத்தாடும் மல்லிகையின் கூட்டம்
மாலையை சேராமல் என்ன இந்த மாற்றம்
ஓவியம் உருவாகுமோ சுவரின்றியே!

பூங்காற்றே கொஞ்சம் உண்மை சொல்ல வருவாயா
போராடும் நியாயம் சாட்சி சொல்லி போவாயா
மேகங்கள் கலையலாம் வானமே கலையுமா
உள்ளங்கள் கலங்கலாம் உண்மையே கலங்குமா
ஆறுதல் கூறாயோ அருகில் வந்து.

பூங்காற்றே கொஞ்சம் உண்மை சொல்ல வருவாயா
போராடும் நியாயம் சாட்சி சொல்லி போவாயா.

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.