மஞ்சள் பூசும் பாடல் வரிகள்

Last Updated: Sep 22, 2023

Movie Name
Friends (2001) (ப்ரெண்ட்ஸ்)
Music
Ilaiyaraaja
Year
2001
Singers
Devan, Sujatha Mohan
Lyrics
Palani Barathi
மஞ்சள் பூசும் வானம் தொட்டு பார்த்தேன்
கொஞ்சி பேசும் தத்தை பேச்சை கேட்டேன்
சேலை கட்டி போகும் மேகம் பார்த்தேன்
சோலை பூவை மாலை ஒன்று கேட்டேன்
மனதிலே மனதிலே புது அலைகள் அடித்தது
விழியிலே விழியிலே பொன்மீன்கள் துடித்தது
காதல் வருக வருக இவள் நாணம் ஒழிக ஒழிக
மஞ்சள் பூசும் வானம் தொட்டு பார்த்தேன்
கொஞ்சி பேசும் தத்தை பேச்சை கேட்டேன்
சேலை கட்டி போகும் மேகம் பார்த்தேன்
சோலை பூவை மாலை ஒன்று கேட்டேன்

கோலம் போட வாசல் உள்ளது
எந்தன் வீடோ வாசல் அற்றது

ஹோ உந்தன் உள்ளம் கோயில் போன்றது
அதனால் தானே நான் தீபம் தந்தது

கண்கள் காணும் தூரத்தில் வாழும் வாழ்க்கை போதும்

பாரம் கொண்ட மேகங்கள் நீரால் மண்ணை தீண்டும்

எந்தன் காதல் ஒரு வழி திரும்பி செல்லு கண்மணி

மஞ்சள் பூசும் வானம் தொட்டு பார்த்தேன்
கொஞ்சி பேசும் தத்தை பேச்சை கேட்டேன்
சேலை கட்டி போகும் மேகம் பார்த்தேன்
சோலை பூவை மாலை ஒன்று கேட்டேன்

தென்றல் வந்து ஜன்னல் திறந்தது
ஜன்னலின் வழியே காதல் நுழைந்தது

ஹோ காதல் நுழைய காற்று நின்றது
ஜன்னல் கதவை மூடி சென்றது

மூடும் கண்கள் எப்போதும் காற்றை காண்பதில்லை

கனவில் தோன்றும் வண்ணங்கள் உண்மை ஆவதில்லை

திரும்ப வேண்டும் என்வழி சொல்லு சொல்லு நல்வழி

மஞ்சள் பூசும் வானம் தொட்டு பார்த்தேன்
கொஞ்சி பேசும் தத்தை பேச்சை கேட்டேன்
சேலை கட்டி போகும் மேகம் பார்த்தேன்
சோலை பூவை மாலை ஒன்று கேட்டேன்
மனதிலே மனதிலே புது அலைகள் அடித்தது
விழியிலே விழியிலே பொன்மீன்கள் துடித்தது
காதல் வருக வருக இவள் நாணம் ஒழிக ஒழிக
மஞ்சள் பூசும் வானம் தொட்டு பார்த்தேன்
கொஞ்சி பேசும் தத்தை பேச்சை கேட்டேன்
சேலை கட்டி போகும் மேகம் பார்த்தேன்
சோலை பூவை மாலை ஒன்று கேட்டேன்

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.