நிறம் பிரித்து பார்த்தேன் பாடல் வரிகள்

Movie Name
Time (1999) (டைம்)
Music
Ilaiyaraaja
Year
1999
Singers
Sujatha Mohan
Lyrics
Palani Barathi

நிறம் பிரித்து பார்த்தேன் உன் நெஞ்சின் வண்ணமென்ன
சுரம் பிரித்து கேட்டேன் சங்கீத வண்ணமென்ன
பறந்தேன் திரிந்தேன் உன் ஆசையில் ஓ..ஓ.
கரைந்தேன் உறைந்தேன் உன் காதலில் ஓ..ஓ.(நிறம்)

எந்த மேகம் எந்த ஊரில் இன்று சென்று பொழியும்
முன்னாலே முன்னாலே யார் சொல்லுவார்
எந்த கல்லில் என்ன சிற்பம் யார் வடிக்க கூடும்
முன்னாலே முன்னாலே யார் சொல்லுவார்....

காலமே படைத்தது காலமே மறைத்தது
நாளைகள் என்பது நாளைதான் உள்ளது
காலமகள் சுட்டுவிரல் எந்த திசை காட்டும்
அங்குதான் மேகமும் மழை நீர் ஊற்றும்..ம்ம்...(நிறம்)

ஓவியத்தில் எந்த கோடு எங்கு சேர கூடும்
எல்லாமே எல்லாமே நம் கையிலே
வாழ்க்கை என்னும் சாலை ஒன்று எங்கு யாரை சேர்க்கும்
எல்லாமே எல்லாமே யார் கையிலே

வசந்தத்தின் சோலைகள் வழியிலே தோன்றலாம்
காலமும் காதலும் தோழமை ஆகலாம்
முத்துச்சிப்பி மூடிவைக்கும் முத்துக்கள் போல் ஆசை
மூடிவைத்த நெஞ்சுக்குள்ளே அலைக்கடல் ஓசை (நிறம்)

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.