கனவே கனவே கலைந்து பாடல் வரிகள்

Last Updated: Jun 07, 2023

Movie Name
Dharani (2015) (தரணி)
Music
Ensone Bakkiyanathan
Year
2015
Singers
Unni Menon
Lyrics
Palani Barathi
கனவே கனவே கலைந்து எங்கு போகிறாய்
கலங்கும் மனதை என்ன செய்ய போகிறாய்
சிறு மின்னல் காட்டும் வெளிச்சம்
அது தீபம் ஆகுமா
மழை தேடி வந்த மயில்கள்
இந்த இடியை தாங்குமா

கனவே கனவே கலைந்து எங்கு போகிறாய்
கலங்கும் மனதை என்ன செய்ய போகிறாய்

திரையோடு நின்றாடும் நிழல் கூத்து தான் வாழ்க்கை
தரையோடு தள்ளாடி விழுகின்றதோர் பொம்மை
திரையோடு நின்றாடும் நிழல் கூத்து தான் வாழ்க்கை
தரையோடு தள்ளாடி விழுகின்றதோர் பொம்மை

நீரோடும் ஓடை நீரின்றி ஓட
வெறும் கானல் நீரிலே
மனம் தூண்டில் போடுதே
இது முதலா முடிவா
யார் சொல்லுவார்

கனவே கனவே கலைந்து எங்கு போகிறாய்
கலங்கும் மனதை என்ன செய்ய போகிறாய்

காணாத காட்சி எல்லாம் வருகின்றதோர் நேரம்
கண்ணீரில் பிம்பங்கள் கரைகின்றதோர் நேரம்
காணாத காட்சி எல்லாம் வருகின்றதோர் நேரம்
கண்ணீரில் பிம்பங்கள் கரைகின்றதோர் நேரம்

காலங்கள் செய்யும் மாயங்கள் எல்லாம்
புரியாத வாழ்விலே
இருள் மூடும் போதிலே
உயிர் உருகும் உணர்வே
கலங்காதிரு

கனவே கனவே கலைந்து எங்கு போகிறாய்
கலங்கும் மனதை என்ன செய்ய போகிறாய்

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.