எடுடா அந்த சூரிய பாடல் வரிகள்

Last Updated: Feb 02, 2023

Movie Name
Puthiya Mannargal (1994) (புதிய மன்னர்கள்)
Music
A. R. Rahman
Year
1994
Singers
Minmini, S. P. Balasubramaniam
Lyrics
Palani Barathi
எடுடா அந்த சூரிய மேளம்
அடிடா நல்ல வாலிப தாளம்

எழுந்து விட்டோம் இமயம் போலே
உயர்ந்து நிற்கும் சிகரம் எல்லம் நமக்கு கீழே

எடுடா அந்த சூரிய மேளம்
அடிடா நல்ல வாலிப தாளம்

எழுந்து விட்டோம் இமயம் போலே
உயர்ந்து நிற்க்கும் சிகரம் எல்லாம் நமக்கு கீழே

ஆணையிட்டால் விண்ணும் கூட
வந்து நிற்க வெண்டும் நமது காலின் கீழே

ஆணையிட்டால் விண்ணும் கூட
வந்து நிற்க வெண்டும் நமது காலின் கீழே

மேகத்தை கையில் பிழிந்து பார்க்கலாம்
பாலையின் தாகம் தீர்த்து வைக்கலாம்

நிலவுக்கும் மீசை வரைந்து பார்க்கலாம்
சொர்க்கத்தின் ஜன்னல் திறந்து பார்க்கலாம்

பூமியைத் தோளில் சுமந்து செல்லலாம்
பூவுக்குள் புயலைப் பூட்டி வைக்கலாம்

வானத்தில் பேரை எழுதி வைக்கலாம்
சூரியன் தொட்டு முத்தம் கேட்கலாம்

வாழ்க்கை இங்கே நதிகள் போலே
வாழ்வதற்கு வா வா இங்கே நீச்சல் அடி

எடுடா அந்த சூரிய மேளம்
அடிடா நல்ல வாலிப தாளம்

கண்ணீரை இனி தள்ளி வைக்கலாம்
புன்னகைப் பூவை அள்ளி வைக்கலாம்
பறவைகள் கூட்டி விருந்து வைக்கலாம்
றெக்கைகள் கேட்டு பறந்து பார்க்கலாம்

தேவதை தேசம் சென்று வரலாம்
வண்ணங்கள் தூவி குதூகலிக்கலாம்
இளமைத் துள்ள அணிவகுக்கலாம்
கவிதை சொல்லி கை குலுக்கலாம்
இன்னும் என்ன இன்பமுண்டு
கண்டெடுத்து வா வா இங்கே அனுபவிக்கலாம்

எடுடா அந்த சூரிய மேளம்
அடிடா நல்ல வாலிப தாளம்

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.