கடவுள் தந்த அழகிய பாடல் வரிகள்

Last Updated: Mar 28, 2023

Movie Name
Maayavi (2005) (மாயாவி)
Music
Devi Sri Prasad
Year
2005
Singers
S.P.B. Charan, Tippu
Lyrics
Palani Barathi
கடவுள் தந்த அழகிய வாழ்வு
உலகம் முழுதும் அவனது வீடு
கண்கள் மூடியே வாழ்த்து பாடு

கருணை பொங்கும் உள்ளங்கள் உண்டு
கண்ணீர் துடைக்கும் கைகளும் உண்டு
இன்னும் வாழனும் நூறு ஆண்டு
எதை நாம் இங்கு கொண்டு வந்தோம்
எதை நாம் அங்கு கொண்டு செல்வோம்

அழகே பூமியின் வாழ்கையை
அன்பில் வாழ்ந்து விடைப் பெறுவோம்

கடவுள் தந்த அழகிய வாழ்வு
உலகம் முழுதும் அவனது வீடு
கண்கள் மூடியே வாழ்த்து பாடு

பூமியில் பூமியில் இன்பங்கள் என்றும் குறையாது
வாழ்க்கையில் வாழ்க்கையில் எனக்கொன்றும் குறைகள் கிடையாது
எது வரை வாழ்க்கை அழைக்கிறதோ.. ஒ..

எது வரை வாழ்க்கை அழைக்கிறதோ
அது வரை நாமும் சென்றிடுவோம்
விடைபெறும் நேரம் வரும் போதும்
சிரிப்பினில் நன்றி சொல்லிவிடுவோம் பரவசம் இந்த பரவசம்
எந்நாளும் நெஞ்சில் தீராமலிங்கே வாழுமே

கடவுள் தந்தே அழகிய வாழ்வு
உலகம் முழுதும் அவனது வீடு
கண்கள் முடியே வாழ்த்து பாடு

நாமெல்லாம் சுவாசிக்க தனி தனி காற்று கிடையாது
மேகங்கள்,தெய்வங்கள் இடங்களை பார்த்து பொழியாது
கோடையில் இன்று இலையுதிரும்
வசந்தங்கள் நாளை திரும்பிவரும்
வசந்தங்கள் மீண்டும் வந்துவிட்டால் குயில்களின் பாட்டு காற்றில்வரும்

முடிவதும் பின்பு தொடர்வதும்
இந்த வாழ்க்கை சொல்லும்
பாடங்கள் தானே கேளடி

கடவுள் தந்தே அழகிய வாழ்வு
உலகம் முழுதும் அவனது வீடு
கண்கள் முடியே வாழ்த்து பாடு

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.