கவிதையே தெரியுமா பாடல் வரிகள்

Movie Name
Jayam (2003) (ஜெயம்)
Music
R. P. Patnaik
Year
2003
Singers
Harini, Manickka Vinayagam
Lyrics
Arivumathi
கவிதையே தெரியுமா? என் கனவு நீதானடி
இதயமே தெரியுமா? உனக்காகவே நானடி
இமை மூட மறுக்கின்றதே ஆவலே
இதழ் சொல்ல துடிக்கின்றதே காதலே

கவிதையே தெரியுமா? என் கனவு நீதானடி
கவிதையே தெரியுமா?

குறும்பில் வளர்ந்த உறவே
என் அறையில் நுழைந்த திமிரே

மனதை பறித்த கொலுசே
என் மடியில் விழுந்த பரிசே

ஊஞ்சல் மழை மேகம் அருகினில் வந்து
என்னை தாலாட்டுதே

வானம் காணாத வென்னிலவொன்று மோக பாலூட்டுதே

நாணம் பொய் நீட்டுதே ஹே

கவிதையே தெரியுமா? என் கனவு நீதானடி
கவிதையே தெரியுமா?

தகிட ததுமி தகிட ததுமி தந்தானா
இதய ஒலியின் ஜதியில் எனது தில்லானா

தகிட ததுமி தகிட ததுமி தந்தானா
இதய ஒலியின் ஜதியில் எனது தில்லானா

உயிரில் இறங்கி வரவா? உன் உடலில் கரைந்து விடவா?

உறக்கம் திறக்கும் திருடா
என் கனவில் பதுங்கி இருடா

புடவையாய் மாறி பொன் உடல் மூடி உன்னுடன் வாழவா?

இருவரின் ஆடை இமைகளே ஆக இரவை நாம் ஆளவா?

வேர்வை குடை தேடவா… ஹா

கவிதையே தெரியுமா? என் கனவு நீதானடி
இதயமே தெரியுமா? உனக்காகவே நானடி
இமை மூட மறுக்கின்றதே காதலே
இதழ் சொல்ல துடிக்கின்றதே காதலே

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.