மாலை என் வேதனை பாடல் வரிகள்

Movie Name
Sethu (1999) (சேது)
Music
Ilaiyaraaja
Year
1999
Singers
P. Unnikrishnan
Lyrics
Arivumathi
மாலை என் வேதனை கூட்டுதடி
காதல் தன் வேலையை காட்டுதடி
என்னை வாட்டும் வேலை ஏனடி
நீ சொல்வாய் கண்மணி
முகம் காட்டு எந்தன் பௌர்ணமி
என் காதல் வீணை நீ
வேதனை சொல்லிடும் ராகத்திலே
வேகுதே என் மனம் மோகத்திலே

மாலை என் வேதனை கூட்டுதடி
காதல் தன் வேலையை காட்டுதடி

காதலில் தோற்றவர் கதை உண்டு இங்கே ஆயிரம்
வேண்டாத பேச்சுக்கள் ஏன் டா அம்பி
காதலும் பொய்யும் இல்லை உண்மை கதை மண்ணில் ஆயிரம்
உன் காதல் சஸ்பென்சு ஏன்னா அம்பி
காதல் செஞ்சா பாவம் அந்த ஆதாம் காலத்தில்
எதுக்கு வீணா சோகம் கதைய முடிடா நேரத்தில்
பூங்கிளி கைவரும் நாள் வருமா
பூமியில் சொர்கமும் தோன்றிடுமா?

மாலை என் வேதனை கூட்டுதடி
காதல் தன் வேலையை காட்டுதடி

காற்று விடும் கேள்விக்கு மலர் சொல்லும் பதில் என்னவோ?
வாசங்கள் பேசாத பதிலா தம்பி..
மேகம் விடும் கேள்விக்கு வெண்ணிலவின் பதில் என்னவோ?
கடல் ஆடும் அலை கூட பதில்தான் தம்பி..
அவளின் மௌனம் பார்த்து பதை பதிக்கும் என் மனம்..
வேண்டாத எண்ணம் வரும் காதல் திருமணம்
மோகமுள் நெஞ்சிலே பாய்கிறதே..
என் மனம் அவள் மடி சாய்கிறதே..

மாலை என் வேதனை கூட்டுதடி
காதல் தன் வேலையை காட்டுதடி
என்னை வாட்டும் வேலை ஏனடி
நீ சொல்வாய் கண்மணி
முகம் காட்டு எந்தன் பௌர்ணமி
என் காதல் வீணை நீ
வேதனை சொல்லிடும் ராகத்திலே
வேகுதே என் மனம் மோகத்திலே

மாலை என் வேதனை கூட்டுதடி
காதல் தன் வேலையை காட்டுதடி

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.