வார்த்தை தவறி பாடல் வரிகள்

Last Updated: Mar 28, 2023

Movie Name
Sethu (1999) (சேது)
Music
Ilaiyaraaja
Year
1999
Singers
Ilaiyaraaja
Lyrics
Ilaiyaraaja
வார்த்தை தவறி விட்டாய் கண்ணம்மா
மார்பு துடிக்குதடி
காற்றில் கலந்து விட்டாய் கண்ணம்மா
கண்கள் கலங்குதடி
பறந்ததேன் மறந்ததேன் எனது உயிரை
படித்ததேன் முடித்ததேன் உனது கதையை
எரியுதே உலகமே சோக நெருப்பில்
வார்த்தை தவறி விட்டாய் கண்ணம்மா
மார்பு துடிக்குதடி

நீ போன பாதை எதுவென்று சொல்லு
நானும் உன் பின்னே அங்கே வர
இப்போதும் கூட எதுவென்று சொல்லு
உன் வீடு தேடி நானும் வர
தேர் வரும் நாள் வரும் என்று நினைத்தேனே
தீ உனை தீண்டவோ திரும்பி நடந்தேனே
பூமியின் தேவதை புழுதி மண் மூடலாமோ
வார்த்தை தவறி விட்டாய் கண்ணம்மா
மார்பு துடிக்குதடி
காற்றில் கலந்து விட்டாய் கண்ணம்மா
கண்கள் கலங்குதடி

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.