இடரினும் பாடல் வரிகள்

Movie Name
Tharai Thappattai (2016) (தாரை தப்பட்டை)
Music
Ilaiyaraaja
Year
2016
Singers
Sharreth
Lyrics
Ilaiyaraaja
இடரினும் எனதுறு நோய் தொடரினும்
நின்கழல் தொழுது எழுவேன்
வாழினும் சாவினும் வருந்தினும் போ ய் வீழினும்
நின்கழல் விழுவேன் நள்ளே ன்
தா ளிலம் தடம் புனல் தயங்கு சென்னி
போளில மதி வய்த்த புண்ணியனே
போளில மதி வய்த்த புண்ணியனே

என்னுள்ளம் கோவில் அங்கே உண்டு தெய்வம்
அது இந்த கீதம் அல்லவா சொல்லவா
உன்னை தொடும் உண்மை அல்லவா
நீ வந்தது எங்கோ நானும் வந்தது எங்கோ
நம்மை இங்கு ஒன்றாய் சேர்த்ததே இசையே
எந்தன் முன்பு உன்னை வைத்ததே

பிறந்தது சிட்ரூரில்
வாழ்வது ஓலை குடிலில்


இருக்கும் இவை வந்து என்னை என்ன செய்யும்
மேகமற்ற வான் போல தெளிந்த தண்ணீர் போல
ஊற்றெடுக்கும் இசை அமுதம் எந்தன் மீது ஓடும்
நீ விரும்பும் நே ரம் உனக்கிது வே ண்டும்
உன் கவனம் யா வும் பொழுது போக தீரும்
சிறிதே இசைத்தாலும் அருமருந்தாகும்
வாழ்வென்ன இசை என்ன எனக்கு ஒன்றாகும்

என்னுள்ளம் கோவில் அங்கே உண்டு தெய்வம்
அது இந்த கீதம் அல்லவா சொல்லவா
உன்னை தொடும் உண்மை அல்லவா


ஊர்கள் கூடும் திருநாளை
தொடங்கி வைக்கும் என் கூட்டம்
முடிந்தால் ஊரோரம் ஒதுங்கி வாழ வேண்டும்
இசை தெய்வம் கலை வாணி எனக்கருளும் போதும்
ஊர் தெய்வம் பேசாது
சாட்சி போல பார்க்கும்
நிறைந்த எந்தன் நெஞ்சம்
திறந்திருக்கும் வானம்
குறைகள் தன்னை தள்ளி
உண்மை கொண்டு வாழும்
எனக்கென்று எது உண்டு
இங்கு இந்த மண்ணில்
எந்த எதிர்பார்ப்பும் இல்லை
வேறு என்ன வேண்டும்


என்னுள்ளம் கோவில் அங்கே உண்டு தெய்வம்
அது இந்த கீதம் அல்லவா சொல்லவா
உன்னை தொடும் உண்மை அல்லவா

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.