Enna Petha Raasa (Male) Lyrics
என்னப் பெத்த ராசா பாடல் வரிகள்
என்னப் பெத்த ராசா என்னப் பெத்த ராசா
எங்க கொற தீர்க்க வந்த சின்ன ரோசா
மடி மீது குடி வந்த மானே
குடிச்சாலும் திகட்டாத தேனே
கண்ணு பட்ட மாயம் தென்றல் பட்டு காயம்
கொஞ்சிச் சிரிக்கும் நந்தவனமே...(என்ன)
தாயார் தவம் இருக்க தந்தை ஒரு நோன்பிருக்க
வரமா கெடச்ச என் செல்வமே அட என் தங்கமே
எத்தனையோ வயிற் இருக்க ஏழை வயிற்தான் எடுத்து
அம்மனா கொடுத்த என் செல்வமே
உன்னோட ரெண்டு கண்ணு உன்னப் பெத்த ஆத்தா
எந்நாளும் அவளை எண்ணு உன்னை அவ காப்பா
கண்டெடுத்த முத்தே முத்தே
உனைச் சூடவே இரு மனம் ஏங்குது
மனம் இனிக்கும் கனியே சுவையே...(என்னப்)
மேல்நாடு அனுப்பி வெச்சு நல்லபடி படிக்க வெப்பேன்
உன்னையே புகழ ஊர் ஏங்கணும் இந்த ஊர் ஏங்கணும்
பல்லாக்கு தேரு செஞ்சு உன்னுடைய பவனி கண்டு
நெஞ்செல்லாம் உருகி நான் வாழ்த்தணும்
பரம்பர பரம்பரையா பண்பு கொண்டு வாழு
தலமொற தலமொறையா இந்த மண்ண ஆளு
காத்திருக்கு காலம் அங்கே
அது உனக்காகவே நீ எனக்காகவே
கையில் கிடைத்த மணியே ஒளியே...(என்னப்)
இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.