எல்லெல்லே எட்டிப் பாடல் வரிகள்

Last Updated: Mar 28, 2023

Movie Name
Naiyaandi (2013) (நையான்டி)
Music
M. Ghibran
Year
2013
Singers
Leon D'Souza & Sundar Narayana Rao
Lyrics
Arivumathi
எல்லெல்லே எட்டிப் பார்த்தாளே பார்த்தாளே
லேல்லேல்லே முட்டி சாய்த்தாளே சாய்த்தாளே
நேற்றே தென்றல் காற்றாலே
உயிரைக் கரை உடைத்து போட்டாளே
எனக்கு எனக்கு என வாய்த்தாளே
எல்லே லேல்லே லே

எல்லெல்லே எட்டிப் பார்த்தாளே பார்த்தாளே

கன்னத்தில் முத்தப் பள்ளி திறக்கவா
வெட்கத்தை எச்சில் தொட்டுத் துடைக்கவா
நெஞ்சுக்குள் உன்னைக் கட்டி இறக்கவா
நேற்றுக்கும் இன்று சேர்த்து சிரிக்கவா
தேன் என தித்திக்கின்றாய்
ஏனோ நீ தப்பிக்கின்றாய்
அழகின் நிறை குடம் நீயா
கனவு மழையது பொழியுதே பொழியுதே
கவிதை குடையது விரியுதே விரியுதே
கனவு மழையது பொழியுதே பொழியுதே
கவிதை குடையது விரியுதே விரியுதே
மின் வெட்டு மின் வெட்டு கண்ணில்
கல் வெட்டு கல் வெட்டு நெஞ்சில்
விண் முட்டி விண் முட்டி பறப்போம்

எல்லெல்லே எட்டிப் பார்த்தாளே பார்த்தாளே
நேற்றே தென்றல் காற்றாலே
உயிரை கரை உடைத்து போட்டாளே
எனக்கு எனக்கு என வாய்த்தாளே
எல்லே லேல்லே லே

செல்லமா சின்ன சண்டை பிடிக்கிறேன்
தொட்டதாய் காற்றை மெல்ல அடிக்கிறேன்
வெட்கத்தை கட்டி வைத்து உதைக்கிறேன்
பத்துக்கு உன்னை மொத்தம் நனைக்கிறேன்
ஏனோ நான் உன்னைக் கண்டேன்
மூச்சாய் நான் முந்திக் கொண்டேன்
கனவின் வழிப் பறி நீயா
கவிதை எழுதிட நிலவினை கிழிக்கிறேன்
உயிரை உனதிடம் உயிலென கொடுக்கிறேன்
கவிதை எழுதிட நிலவினை கிழிக்கிறேன்
உயிரை உனதிடம் உயிலென கொடுக்கிறேன்
வெட்டட்டும் வெட்டட்டும் மின்னல்
முட்டட்டும் முட்டட்டும் ஜன்னல்
கொட்டட்டும் கொட்டட்டும் மழையே

எல்லெல்லே எட்டிப் பார்த்தாளே பார்த்தாளே
லேல்லேல்லே முட்டி சாய்த்தாளே சாய்த்தாளே
நேற்றைக்கு தென்றல் காற்றாலே
உயிரை கரை உடைத்து போட்டாளே
எனக்கு எனக்கு என வாய்த்தாளே
எல்லே லேல்லே லே

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.