சின்னஞ்சிறு கிளியே பாடல் வரிகள்

Movie Name
Kannukkul Nilavu (2000) (கண்ணுக்குள் நிலவு)
Music
Ilaiyaraaja
Year
2000
Singers
K. S. Chithra
Lyrics
சின்னஞ்சிறு கிளியே தேயாத வெண்ணிலவே
தோள் மீது தொட்டில் கட்டி நான் வளர்த்த சூரியனே
துளி சோகம் கண்டால் உந்தன் கண்ணில்
புயல் வீசும் கண்ணா எந்தன் நெஞ்சில்
அறிவாயோ ஹோ
சின்னஞ்சிறு கிளியே தேயாத வெண்ணிலவே
தோள் மீது தொட்டில் கட்டி நான் வளர்த்த சூரியனே

பகல் நேரத்திலும் நிலா கேட்கும் உந்தன்
கண்ணில் நிலவு குடியிருக்கும்
இதழ் ஓரத்திலும் சிந்தும் தேன் துளிகள்
அமுதாய் அமுதாய் அது இனிக்கும்
நீ சிரித்தால் அங்கு தெய்வீக சங்கீதம் கேட்கும்
நீ பார்த்தால் மணி தீபங்கள் என் நெஞ்சில் ஆடும்
அறிவாயோ ஹோ

சின்னஞ்சிறு கிளியே தேயாத வெண்ணிலவே
தோள் மீது தொட்டில் கட்டி நான் வளர்த்த சூரியனே

என்னை அன்னை என்றான் வரம் அள்ளி தந்தான்
மகனாய் பிறந்து தவம் முடித்தான்
விழி தேடி வந்து மடி ஆடி நின்று
எரியும் விளக்காய் ஒளி கொடுத்தான்
உன் நிழலும் என் மகன் போல பாலூட்ட கேட்கும்
தாலாட்டும் இந்த சொந்தங்கள் எப்போதும் வேண்டும்
ஆராரோ ….

சின்னஞ்சிறு கிளியே தேயாத வெண்ணிலவே
தோள் மீது தொட்டில் கட்டி நான் வளர்த்த சூரியனே
துளி சோகம் கண்டால் உந்தன் கண்ணில்
புயல் வீசும் கண்ணா எந்தன் நெஞ்சில்
அறிவாயோ ஹோ
சின்னஞ்சிறு கிளியே தேயாத வெண்ணிலவே
தோள் மீது தொட்டில் கட்டி நான் வளர்த்த சூரியனே

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.