ரோசப்பூ சின்ன ரோசாப்பூ பாடல் வரிகள்

Movie Name
Suryavamsam (1997) (சூர்யவம்சம்)
Music
S. A. Rajkumar
Year
1997
Singers
Hariharan
Lyrics

ரோசப்பூ சின்ன ரோசாப்பூ
ஒம்பேரச் சொல்லும் ரோசாப்பூ
காத்தில் ஆடும் தனியாக
ஒம் பாட்டு மட்டும் துணையாக….(ரோசப்பூ)

மனசெல்லாம் பந்தலிட்டு
மல்லிக்கொடியாக ஒன்ன விட்டேன்
உசுருக்குள் கோயில் கட்டி ஒன்னக்
கொலு வெச்சிக் கொண்டானினேன்

மழ பேஞ்சாத்தானே மண்வாசம்
ஒன்ன நெனச்சாலே பூவாசந்தான்
பாத மேல பூத்திருப்பேன் கையில்
ரேகை போல சேர்ந்திருப்பேன்……(ரோசப்பூ)

கண்ணாடி பார்க்கையில அங்க
முன்னாடி ஒம் முகந்தான்
கண்மூடித் தூங்கயில காணும்
கனவெல்லாம் ஒன்னோடதான்

நெழலுக்கும் நெத்தி சுருங்காம
ஒரு குடையாக மாறட்டுமா
மலைமேல் விளக்கா ஏத்தி வைப்பேன்
உன்னப் படம் போல் மனசில் மாட்டிவைப்பேன்.(ரோசாப்பூ)

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.