சலக்கு சலக்கு பாடல் வரிகள்

Last Updated: Oct 01, 2023

Movie Name
Suryavamsam (1997) (சூர்யவம்சம்)
Music
S. A. Rajkumar
Year
1997
Singers
Arun Mozhi, Sujatha Mohan
Lyrics
Palani Barathi

சலக்கு சலக்கு சரிக சேல சலக்கு சலக்கு
வெலக்கு வெலக்கு வெக்கம் வந்தா வெலக்கு வெலக்கு
உனக்குக் குளுருன்னா என்ன எடுத்துப் போத்திக்கோ
மாமன் தோளிலே மச்சம் போல ஒட்டிக்கோ

அடடா அல்வாத்துண்டு இடுப்பு உன் இடுப்பு
அழகா பத்திகிச்சு நெருப்பு தூள் கெளப்பு....(சலக்கு)

அடியே மெட்டிச் சத்தம் கேட்காமத்தான்
தலையே வெடிச்சிருச்சு வெகுநேரந்தான்
வரப்பில் உன்னப் பாத்தா மறு வேளதான்
இடுப்பில் நிக்காதைய்யா என் சேலதான்

காலையிலும் காட்சி உண்டு
சாத்திக்கடி கதவத்தான்
கட்டிலுக்குக் கால் வலிச்சா
கட்டாந்தரை படுக்கதான்

உடும்பு முழுக்க இப்ப ஒரு
ரயிலு ஒடுது மச்சான்
கலச்சு நொறுக்கச் சொல்லி
என் வளையல் கெஞ்சுது மச்சான்..(அடடா)

கெழக்கே வெளுக்காம இருந்தாலென்ன
இரவே முடியாமத் தொடர்ந்தாலென்ன
குடையே பிடிக்காம நனஞ்சாலென்ன
படுக்க சுருட்டாம கெடந்தாலென்ன

மார்கழியில் பாய் விரிச்சா
மாசி வந்தா மசக்கதான்
ஆத்தங்கர அரசமரம்
சுத்த வேணாம் ஜாலிதான்

உனக்குள் விழுந்த பின்னே
நான் எனக்குள் எழுந்ததென்ன
வெளக்கு அணைச்ச பின்னே
ஒரு வெளிச்சம் தெரிஞ்சதென்ன..(அடடா)

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.