அய்யே என்ன ஆச இது பாடல் வரிகள்

Last Updated: Jun 01, 2023

Movie Name
Chidambarathil Oru Appasamy (2005) (சிதம்பரத்தில் ஒரு அப்பாசாமி)
Music
Ilaiyaraaja
Year
2005
Singers
Manjari, Tippu
Lyrics
Muthulingam

அய்யே என்ன ஆச இது என்னாத்துக்கு
கையக் கால புடிச்சே என்ன பம்மாத்துக்கு
தியேட்டருக்குள் மவுசு கெட்டு
வீட்டுக்குள்ள சினிமாவயா
மாட்டி விட்ட சிறு உலுக்கு
ராத்திரியில் குஷியா இருக்கும்
விடிஞ்சா சிரிப்பு வரும்.......(அய்யே என்ன)

வசதி இல்லா ஏழப் பொண்ணு
கசங்கின சேலையத்தான் கட்டிக்க வேணுமே
ஒசத்தியான உடுப்பு எல்லாம்
சினிமாகாரிங்க தான் உடுத்த வேணுமா

அவ பகட்டுல பரிதவிச்சு
என் ஒதட்டுக்கு செகப்படிச்சே
அப்போ அவ கிட்ட பாத்ததெல்லாம்
இப்போ ஓன் கிட்ட பாக்குறேனே

அவள நெனச்சு என்ன அணைச்சா
ஒடம்பு முழுக்க கூசுது
அவளப் பாத்து தானே உந்தன்
நெனப்பு எனக்கு வந்தது
சினிமா தான் உன்னப் புடிச்சு
தனியா அழகா தலையத் தடவுது..(அய்யே)

கண்ணதாசன் பாட்டில் சொன்ன
கண்ணே கலைமானே கட்டிப் புடிக்க வா
கண்ட கண்ட படத்தில் வர
காதல் காட்சியத் தான் நடத்திக் காட்ட வா

ஒருத்தரும் ஒரு தினுசு
அட நீ அதில் தனி தினுசு
இருக்குற மனம் புதுசு
அதை தொறக்குற என்ன பழசு

ஹே பொழுது விடியும் நேரம் ஆச்சு
போனக் கதைய பேசாதே
வாடக் காத்து வாட்டலாச்சு
அம்மா என்ன வாட்டாதே
ஒறங்குதையா ரெண்டு கொழந்த
முழிச்சா மொகத்த எங்க மூடுவே...(அய்யே)

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.