மானும் ஓடி வரலாம் பாடல் வரிகள்

Movie Name
Navarathinam (1977) (நவரத்தினம்)
Music
Kunnakudi Vaidyanathan
Year
1977
Singers
K. J. Yesudas
Lyrics
Muthulingam
மானும் ஓடி வரலாம்
மாநதியும் ஓடி வரலாம்
மங்கை தனியே வரலாமா
தன் மானம் மறந்து ஓடி வரலாமா
தன் மானம் மறந்து ஓஓஓடி வரலாமா !

பாதையில் எங்குமே போய் வரலாம்
போதையின் நடுவே வரலாமா
நல்ல பாதையில் எங்குமே போய் வரலாம்
குடி போதையின் நடுவே வரலாமா
பொறுமையை ஒரு கணம் விட்டு விடலாம்
பெண்மையின் தன்மையை விடலாமா
பொறுமையை ஒரு கணம் விட்டு விடலாம்
உயர் பெண்மையின் தன்மையை விடலாமா

மானும் ஓடி வரலாம்
மாநதியும் ஓடி வரலாம்
மங்கை தனியே வரலாமா
தன் மானம் மறந்து ஓஓஓடி வரலாமா

நாலும் தெரிந்தால் நன்மையுண்டு
நாணத்தை மற‌ந்தால் தீமையுண்டு
நாலும் தெரிந்தால் நன்மையுண்டு
யாரும் நாணத்தை மற‌ந்தால் தீமையுண்டு
மண்ணையே வெறுத்த மன்னருண்டு
இந்த மண்ணையே வெறுத்த மன்னருண்டு
பெண்ணையே வெறுத்த முனிவருண்டு
குமரி பெண்ணையே வெறுத்த முனிவருண்டு !

மானும் ஓடி வரலாம்
மாநதியும் ஓடி வரலாம்
மங்கை தனியே வரலாமா
தன் மானம் மறந்து ஓஓஓடி வரலாமா !

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.