பனிமலர் ஆடும் மேடையில் பாடல் வரிகள்

Movie Name
Kaithiyin Theerpu (1986) (கைதியின் தீர்ப்பு)
Music
R. Ramanujam
Year
1986
Singers
Deepan Chakravarthy, Vani Jayaram
Lyrics
Muthulingam

பனிமலர் ஆடும் மேடையில்
தேன் துளி சிந்தும் வேளையில்
பழகும் காதல் ஜோடிகள் பாஷை மௌனமோ
துருருருருருருரு துருருருருருருரு

பனிமலர் ஆடும் மேடையில்
தேன் துளி சிந்தும் வேளையில்
பழகும் காதல் ஜோடிகள் பாஷை மௌனமோ

சந்தன மலரினில் சங்கமம் கண்டிடும்
பூந்தளிர் மேனியே.....ஆஹாஹாஹ்
குங்கும விழியினில் கோலங்கள்
வரைந்திடும் சுந்தர தேவியே

சந்தன மலரினில் சங்கமம் கண்டிடும்
பூந்தளிர் மேனியே.....
குங்கும விழியினில் கோலங்கள் வரைந்திடும்
சுந்தர தேவியே.....

நெஞ்சிலே ராகங்கள் மஞ்சங்கள் காணுமோ
மோகமோ தாகமோ பார்வையால் தீருமோ
துருருருருருருரு துருருருருருருரு

பனிமலர் ஆடும் மேடையில்
தேன் துளி சிந்தும் வேளையில்
பழகும் காதல் ஜோடிகள் பாஷை மௌனமோ

வஞ்சிமகள் பஞ்சணையில் வந்து
இங்கு கொஞ்சும் மொழி காதல் கீதமே....ஆஹாஹ்ஹா
நாணமும் மஞ்சம் கொள்ள நன்றி கொண்டு
வார்த்தை சொல்ல சொந்தம் தேடுமே

வஞ்சிமகள் பஞ்சணையில் வந்து
இங்கு கொஞ்சும் மொழி காதல் கீதமே...
நாணமும் மஞ்சம் கொள்ள நன்றி கொண்டு
வார்த்தை சொல்ல சொந்தம் தேடுமே

நெஞ்சிலே ராகங்கள் மஞ்சங்கள் காணுமோ
மோகமோ தாகமோ பார்வையால் தீருமோ

துருருருருருருரு
துருருருருருருரு
பனிமலர் ஆடும் மேடையில்
தேன் துளி சிந்தும் வேளையில்
இருவரும் : பழகும் காதல் ஜோடிகள்
பாஷை மௌனமோ...ம்ம்ம்ம்.....

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.