En Nenjame Kann Thunjumo Lyrics
என் நெஞ்சமே கண் துஞ்சுமோ பாடல் வரிகள்
Last Updated: Jul 17, 2026
என் நெஞ்சமே கண் துஞ்சுமோ
நான் வாழ்வதே நீ வாழவே
நினைவிலும் கனவிலும்
நினைக்கிறேன் துடிக்கிறேன்
என் நெஞ்சமே கண் துஞ்சுமோ
நான் வாழ்வதே நீ வாழவே
புகைந்திடும் எரிமலை வெடித்திடும் வேளையில்
விதைத்தவன் வினைகளை அறுத்திடும் நாள் இது
புகைந்திடும் எரிமலை வெடித்திடும் வேளையில்
விதைத்தவன் வினைகளை அறுத்திடும் நாள் இது
தடையை உடைத்து கடமை முடித்து வாழ்ந்திட
தடையை உடைத்து கடமை முடித்து வாழ்ந்திட
நினைவிலும் கனவிலும்
நினைக்கிறேன் துடிக்கிறேன்
என் நெஞ்சமே கண் துஞ்சுமோ
நான் வாழ்வதே நீ வாழவே...
உதிப்பதோ சூரியன் உதிப்பதோ சூரியன்
மறைப்பதோ பனித்துளி
நினைத்ததை முடிப்பவன்
நெருங்கினால் புலியிவன்
தடையை உடைத்து கடமை முடித்து வாழ்ந்திட
தடையை உடைத்து கடமை முடித்து வாழ்ந்திட
நினைவிலும் கனவிலும்
நினைக்கிறேன் துடிக்கிறேன்
என் நெஞ்சமே கண் துஞ்சுமோ
நான் வாழ்வதே நீ வாழவே...
நினைவிலும் கனவிலும்
நினைக்கிறேன் துடிக்கிறேன்....