ஆடவர் தழுவும் அழகிய மல்லிகை பாடல் வரிகள்

Movie Name
Kaithiyin Theerpu (1986) (கைதியின் தீர்ப்பு)
Music
R. Ramanujam
Year
1986
Singers
P. Susheela
Lyrics

ஆடவர் தழுவும் அழகிய மல்லிகை
ஆயினும் உன்னை நாடிடும் காரிகை
ஆடவர் தழுவும் அழகிய மல்லிகை
ஆயினும் உன்னை நாடிடும் காரிகை

ஓவியம் எழுதும் தூரிகை
உன்னிடம் மயங்கும் அகலிகை
ஓவியம் எழுதும் தூரிகை
உன்னிடம் மயங்கும் அகலிகை

தேனிலா உனது ஆசையில்
தினமும் தேயுதே காயுதே
தேனிலா உனது ஆசையில்
தினமும் தேயுதே காயுதே
ஆடவர் தழுவும் அழகிய மல்லிகை

தென்றல் காற்று தீண்டத்தானே
சோலைப் பூவும் மலர்ந்தது
உந்தன் கைகள் தீண்டத்தானே
எந்தன் மேனி வளர்ந்தது

தென்றல் காற்று தீண்டத்தானே
சோலைப் பூவும் மலர்ந்தது
உந்தன் கைகள் தீண்டத்தானே
எந்தன் மேனி வளர்ந்தது

புது நாடகம் தினம் ஆடலாம்
புது நாடகம் தினம் ஆடலாம்
விழியாலே கதை பேசி விளையாடலாம்

குழு : ஆசையோ மனதில் ஆயிரம்
பாடுவோம் புதிய காவியம்
ஆசையோ மனதில் ஆயிரம்
பாடுவோம் புதிய காவியம்

பெண் : ஆடவர் தழுவும் அழகிய மல்லிகை
ஆயினும் உன்னை நாடிடும் காரிகை

ஓவியம் எழுதும் தூரிகை
உன்னிடம் மயங்கும் அகலிகை
தேனிலா உனது ஆசையில்
தினமும் தேயுதே காயுதே

ஆடவர் தழுவும் அழகிய மல்லிகை
ஆயினும் உன்னை நாடிடும் காரிகை

நதிகள் யாவும் கரையைத் தொட்டு
நடந்தாலென்ன உலகிலே
கடலில் தானே நதிகள் சென்று
கலந்து வாழும் முடிவிலே

நதிகள் யாவும் கரையைத் தொட்டு
நடந்தாலென்ன உலகிலே
கடலில் தானே நதிகள் சென்று
கலந்து வாழும் முடிவிலே

நதி என்பது நானல்லவோ
நதி என்பது நானல்லவோ
நதி தேடும் கடல் இங்கே நீயல்லவோ

குழு : ஆசையோ மனதில் ஆயிரம்
பாடுவோம் புதிய காவியம்
ஆசையோ மனதில் ஆயிரம்
பாடுவோம் புதிய காவியம்

ஆடவர் தழுவும் அழகிய மல்லிகை
ஆயினும் உன்னை நாடிடும் காரிகை
ஓவியம் எழுதும் தூரிகை
உன்னிடம் மயங்கும் அகலிகை
தேனிலா உனது ஆசையில்
தினமும் தேயுதே காயுதே..
லாலலாலாலலா லாலாலாலா.....

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.