சுகம் தரும் நிலா என்னை பாடல் வரிகள்

Movie Name
Sattam Oru Vilaiyattu (1987) (சட்டம் ஒரு விளையாட்டு)
Music
M. S. Viswanathan
Year
1987
Singers
K. S. Chithra, S. P. Balasubramaniam
Lyrics
Pulamaipithan

பெண் : சுகம் தரும் நிலா என்னை
கனல் என்று வெறுப்பது சரியல்ல
ஆண் : ஹாஹ் மணம் தரும் மலர் உன்னை
முள்ளின் கரம் அணைப்பது முறையல்ல

பெண் : சுகம் தரும் நிலா என்னை
கனல் என்று வெறுப்பது சரியல்ல
ஆண் : மணம் தரும் மலர் உன்னை
முள்ளின் கரம் அணைப்பது முறையல்ல

பெண் : இளமனம் துடிக்கிறதே
உனை எண்ணி தவிக்கிறதே
ஆண் : இருவரும் இரு துருவம்
இதில் எங்கு உறவு வரும்

பெண் : சுகம் தரும் நிலா என்னை
கனல் என்று வெறுப்பது சரியல்ல
ஆண் : மணம் தரும் மலர் உன்னை
முள்ளின் கரம் அணைப்பது முறையல்ல

ஆண் : மோகத்தை அழித்து விடு எனும்
பாட்டொன்று நான் இன்று கேட்டேன்
பெண் : ஆசைக்கு சிறகு கட்டி நான்
ஆகாயம் எங்கெங்கும் போனேன்

ஆண் : கண்டதோ மின்மினி
அது கையில் விளக்காகுமா
பெண் : வந்ததோ பெளர்ணமி
எந்தன் வானம் இருளாகுமா

பெண் : சுகம் தரும் நிலா என்னை
கனல் என்று வெறுப்பது சரியல்ல
ஆண் : மணம் தரும் மலர் உன்னை
முள்ளின் கரம் அணைப்பது முறையல்ல

பெண் : கூட்டுக்குள் குயில் இருந்து தினம்
உன் காதல் ராகங்கள் பாடும்
ஆண் : வேட்டைக்கு வரும் வழியில் இந்த
ராகங்கள் யாருக்கு வேண்டும்

பெண் : உன்னைத்தான் எண்ணித்தான்
இந்த ஜீவன் துடிக்கின்றது
ஆண் : தன்னையே மறந்து
ஒரு வாழ்க்கை நடக்கின்றது

பெண் : சுகம் தரும் நிலா என்னை
கனல் என்று வெறுப்பது சரியல்ல
ஆண் : மணம் தரும் மலர் உன்னை
முள்ளின் கரம் அணைப்பது முறையல்ல

பெண் : இளமனம் துடிக்கிறதே
உனை எண்ணி தவிக்கிறதே
ஆண் : இருவரும் இரு துருவம்
இதில் எங்கு உறவு வரும்....

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.