Vaanukkum Meenukkum Lyrics
மானுக்கும் மீனுக்கும் மயிலுக்கும் குயிலுக்கும் பாடல் வரிகள்
Last Updated: Jun 07, 2023
ஏஹே லாலா லாலாலா
ஏஹே லாலா லாலாலா
லல்லலா லல்லா லல்லா லால லால லாலா
மானுக்கும் மீனுக்கும் மயிலுக்கும் குயிலுக்கும்
தடைகள் கிடையாது
நாளுக்கும் பொழுதுக்கும் சிறகுகள் விரிந்திடும்
கவலைகள் இனி ஏது
எண்ணம் போலவே துள்ளி ஆடடி
வண்ணப் பாவையே
விந்தை காணும் நேரம் இங்கே வாவா வாவா..(மானுக்கும்)
மாஞ்சோலைக் குயில் ஒன்றின் குரல் கேளடி
மகிழ்ந்தாடும் அதற்கிங்கு சிறை ஏதடி
சாய்ந்தாடி சதிராடும் மலர்ச் சோலைகள்
சரியாக ஜதி போடும் கிளிப் பிள்ளைகள்
மனம் அங்கு தாவுதே பின் பாட்டு பாடுதே
இளம் தென்றல் வீசுதே கைத் தாளம் போடுதே
காம பஸநிஸா நிஸக ரிகாஸ
நிஸபநி மபகம ஸநிபம
காம பரிஸரி ரிகஸ நிஸாப
நிஸகரி ஸரிநிஸா நிபமக......(மானுக்கும்)
வெண்மேகம் பூத் தூவும் என் பாதையில்
மென் காற்று தாலாட்டும் என் மேடையில்
ஏன் என்று கேட்காத ராஜாங்கத்தில்
எதிர் பாட்டு எனக்கேது என் வாழ்க்கையில்
தேவாதி தேவர்கள் நல் வாழ்த்து கேளடி
ராஜாதி ராஜனும் என் காலில் தானடி
காம பஸநிஸா நிஸக ரிகாஸ
நிஸபநி மபகம ஸநிபம
காம பரிஸரி ரிகஸ நிஸாப
நிஸகரி ஸரிநிஸா நிபமக.....(மானுக்கும்)
இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.