எத்தனையோ கன்னிப் பொண்ணு பாடல் வரிகள்

Movie Name
Jallikattu (1987) (ஜல்லிக்கட்டு)
Music
Ilaiyaraaja
Year
1987
Singers
Mano, S. Janaki
Lyrics
Gangai Amaran
எத்தனையோ கன்னிப் பொண்ணு 
நாட்டில் இருக்கு
அத்தனைக்கும் ஒவ்வொருத்தன் 
பொறந்திருக்குறான் ஹே

எத்தனையோ கன்னிப் பொண்ணு 
நாட்டில் இருக்கு
அத்தனைக்கும் ஒவ்வொருத்தன் 
பொறந்திருக்குறான்

அட யாருக்குத் தான் யாரோ
அத யாரு சொல்லுவாரோ
அட யாருக்குத் தான் யாரோ
அத யாரு சொல்லுவாரோ

தெரிஞ்சுகிட்டா கல்யாணம் தான்
அதுக்கப்புறமா கும்மாளம் தான்

ஹே தெரிஞ்சுகிட்டா கல்யாணம் தான்
அதுக்கப்புறமா கும்மாளம் தான்

ஹே எத்தனையோ கன்னிப் பொண்ணு 
நாட்டில் இருக்கு
அத்தனைக்கும் ஒவ்வொருத்தன் 
பொறந்திருக்குறான் 

பணக்கார பொண்ணு இன்னு ஒன்ன நெனச்சு
பாத்தாலும் பாத்தானே பல்ல இளிச்சு 

ஹிஹிஹி

பணமில்லா பொண்ணு இன்னு தெரிஞ்சதுமே
பாக்காம போனானே மொகம் சுளிச்சு 

ஹொஹ்ஹோ

காதல் வந்தா ஆணும் பெண்ணும்
பேதம் இல்ல ஒண்ணு தான்

ஆமா

தெரியலென்னா நியும் கூட
தெறமை இல்லா மண்ணு தான்

ஆமா

வந்த வரை லாபமின்னு வாழுகிற பேரும் உண்டு
வந்ததெல்லாம் தீந்ததுன்னா வேற வழி தான்

பணமிருந்தா கண்ணடிச்சு கை புடிச்சு
கத முடிச்சு

கத முடிஞ்சா துண்ட விட்டு துணிய விட்டு
ஓடுறவன்

வேலக்காரிக்கேத்த நல்ல வேலக்காரன்

கச்சிதமா மாட்டிக்கிடான் டா

இப்ப மாலைய தான் மாத்திக்கிட்டான் டா

ஹா எத்தனையோ கன்னிப் பொண்ணு 
நாட்டில் இருக்கு
அத்தனைக்கும் ஒவ்வொருத்தன் 
பொறந்திருக்குறான் 

எத்தனையோ வாலிபர்கள் இங்கிருக்கலாம்
அத்தனைக்கும் ஒவ்வொருத்தி 
பொறந்திருக்கலாம் 

தந்தான தந்தன னனா

தந்தன னனா தந்தன னனா

தந்தான தந்தன னனா

தந்தன னனா தந்தன னனா 

தந்தன தந்தன தந்தன தந்தன 
தந்தன தந்தன தன்னா னன்னா

ஜாடிக்கேத்த மூடியின்னு சொல்லுவாங்க இந்த 
மூடிக்கொரு ஜாடிய நான் கண்டு புடிச்சேன்

ஆமா...

கோடி கோடி கல்யாண ஜோடியில இந்த
சேவலுக்கு கோழி ஒண்ண சேத்து முடிச்சேன்
கொக்கரக்கோ...

ஜீவன் டோணு வாங்கித் தாரேன்
ஒடம்ப நல்லா தேத்துங்க 

ம்...

ஒண்ணு ரெண்டு பெத்துப் போட்டு
கண்ணப் போல பாருங்க

ம்...

ஏழையின்னு வாழுவது பூமியில பாவமில்ல
கோழையின்னு வாழ்ந்திருந்தா பாவம் வருண்டா

தெரிஞ்சுக்கணும் நல்லதெல்லாம் அறிஞ்சுக்கணும்

புரிஞ்சுக்கணும்

தெறமை எல்லாம் தவணையில பொண்ணு கிட்ட

காட்டிக்கணும்

காதலுக்கு ஜாதியில்ல பேதமில்ல

ஜோடி ரெண்டு சேந்துகிருச்சு

இப்போ சொந்ததுல பூந்துகிருச்சு

ஆ எத்தனையோ கன்னிப் பொண்ணு 
நாட்டில் இருக்கு
அத்தனைக்கும் ஒவ்வொருத்தன் 
பொறந்திருக்குறான் ஹே

எத்தனையோ கன்னிப் பொண்ணு 
நாட்டில் இருக்கு
அத்தனைக்கும் ஒவ்வொருத்தன் 
பொறந்திருக்குறான்

அட யாருக்குத் தான் யாரோ
அத யாரு சொல்லுவாரோ
அட யாருக்குத் தான் யாரோ
அத யாரு சொல்லுவாரோ

தெரிஞ்சுகிட்டா கல்யாணம் தான்
அதுக்கப்புறமா கும்மாளம் தான்

ஹே தெரிஞ்சுகிட்டா கல்யாணம் தான்
அதுக்கப்புறமா கும்மாளம் தான்

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.