நல்லது நடக்க அம்மன பாடல் வரிகள்

Last Updated: Apr 01, 2023

Movie Name
Koyil Maniyosai (1988) (கோயில் மணியோசை)
Music
Gangai Amaran
Year
1988
Singers
Malasiya Vasudevan, K. S. Chitra
Lyrics
Gangai Amaran
பெண் : நல்லது நடக்க அம்மன நெனச்சு
கும்மியடியுங்க பெண்டுகளா
தந்தானானன தந்தானானன தந்தானானன தந்தானா
எப்பவும் நமக்கு நிம்மதி கிடைக்கும்
அம்மனை நெனைங்க பெண்டுகளா
தந்தானானன தந்தானானன தந்தானானன தந்தானா

ஆண் : கூரப் பொடவக் கட்டி ஓரக் கண்ண வெட்டி
தேரப் போல வரும் செல்லம்மா
பாளை சிரிப்பைக் கொட்டி ஆள அசத்தும் குட்டி
நாளப் பாத்து வந்து சொல்லம்மா

நீ இஷ்ட்டப்பட்டா உன்ன வச்சுக்கிறேன்
என் நெஞ்சில் வச்சு உன்ன தச்சுக்கிறேன்

பெண் : வேட்டி வரிஞ்சு கட்டி பாட்ட புதுசா கட்டி
நோட்டம் பாக்க வந்த செல்லைய்யா
அட நீயோ வெண்ண வெட்டி நானோ வெல்லக்கட்டி
வீணா மல்லுக்கட்ட வந்தியா

ஆண் : வாடி ரதமே கொதிக்குது மனமே
நாடி நரம்புக துடிக்குது தெனமே
கோடி சுகத்த கொடுக்கிறேன் நெசமே
கூடி அணைக்க வாடி என் வசமே

பெண் : மாமன் உனக்கு வெக்கமில்ல
வேற எதுக்கும் லாயக்கில்ல
ஆசை இருக்கு உள்ளுக்குள்ள
ஆனா நான்தான் சின்னப் புள்ள
ஆண் : மயிலே..ஆஹாங்...குயிலே..ம்ஹூம்
அள்ளவா கிள்ளவா மெல்ல வா

பெண் : வேட்டி வரிஞ்சு கட்டி பாட்ட புதுசா கட்டி
நோட்டம் பாக்க வந்த செல்லைய்யா
ஆண் : பாளை சிரிப்பைக் கொட்டி ஆள அசத்தும் குட்டி
நாளப் பாத்து வந்து சொல்லம்மா

பெண் : கம்ப புடிக்கிற வயசுல பாரு
கன்னியப் பாத்ததும் ஏறுது ஜோரு
யாரு என்னத்தான் எதிர்க்கிற ஆளு
நான் ஊரு முழுசையும் முழுங்குற ஆளு

ஆண் : யானைப் புடிக்கும் ஆம்பள நான்
மானப் புடிக்க கஷ்டமில்ல
மானே உன்ன நான் தொட்டுப்புட்டா
ஊரில் யாரும் மிச்சமில்லை
பெண் : நெசமா...ஆமா....அய்யய்யோ...வாம்மா
தள்ளியே நில்லய்யா செல்லைய்யா

ஆண் : கூரப் பொடவக் கட்டி ஓரக் கண்ண வெட்டி
தேரப் போல வரும் செல்லம்மா..
யம்மா.....ஹாங்.....யம்மா.....ஹாங்...யம்மா
பெண் : நீயோ வெண்ண வெட்டி நானோ வெல்லக்கட்டி
வீணா மல்லுக்கட்ட வந்தியா
ஆண் : நீ இஷ்ட்டப்பட்டா உன்ன வச்சுக்கிறேன்
என் நெஞ்சில் வச்சு உன்ன தச்சுக்கிறேன்

பெண் : வேட்டி வரிஞ்சு கட்டி பாட்ட புதுசா கட்டி
நோட்டம் பாக்க வந்த செல்லைய்யா
ஆண் : பாளை சிரிப்பைக் கொட்டி ஆள அசத்தும் குட்டி
நாளப் பாத்து வந்து சொல்லம்மா

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.