ஆண்டவன் யாரையும் விட்டதில்ல பாடல் வரிகள்

Movie Name
Koyil Maniyosai (1988) (கோயில் மணியோசை)
Music
Gangai Amaran
Year
1988
Singers
K. J. Jesudass
Lyrics
Pattukottai Nadarajan
ஆண்டவன் யாரையும் விட்டதில்ல
வாழ்க்கையின் வட்டத்துல
ஆசையை நெஞ்சிலே வச்சுப்புட்டா
சோதனை கொஞ்சமில்ல

வேலியத்தான் போட்டு வப்பான்
வேடிக்கத்தான் பாத்து நிப்பான்
வேலியையும் தாண்டிப்புட்டா
வேதனையில் சிக்க வப்பான்

ஆண்டவன் யாரையும் விட்டதில்ல
வாழ்க்கையின் வட்டத்துல
ஆசையை நெஞ்சிலே வச்சுப்புட்டா
சோதனை கொஞ்சமில்ல

பொட்டு வெச்ச காரணம் கேள்வி குறியாச்சு
கட்டி வெச்ச மாலையோ வாடும்படி ஆச்சு
சொந்தமும் பந்தமும் வந்ததே நேத்து
வந்தத கொண்டுதான் போனதே காத்து
எண்ணி எண்ணி பாத்து பாத்து ஏங்கி போகும்போது
இந்த பொண்ணு பாடிடாத சோகம் ஏது

ஆண்டவன் யாரையும் விட்டதில்ல
வாழ்க்கையின் வட்டத்துல
ஆசையை நெஞ்சிலே வச்சுப்புட்டா
சோதனை கொஞ்சமில்ல

புள்ளி வச்சு கோலந்தான் போட்டதந்த சாமி
கோலங்கள மீறித்தான் ஆடுதிந்த பூமி
எல்லதான் எதுக்கும் உள்ளது பாரு
பூவெல்லாம் சாமிதான் நாமெல்லாம் நாரு
பொண்ணு மனம் பூமி போல பொறுமையாக வாழும்
காலம் வந்து சேரும்போது கடலப் போல சீறும்

ஆண்டவன் யாரையும் விட்டதில்ல
வாழ்க்கையின் வட்டத்துல
ஆசையை நெஞ்சிலே வச்சுப்புட்டா
சோதனை கொஞ்சமில்ல

வேலியத்தான் போட்டு வப்பான்
வேடிக்கத்தான் பாத்து நிப்பான்
வேலியையும் தாண்டிப்புட்டா
வேதனையில் சிக்க வப்பான்

ஆண்டவன் யாரையும் விட்டதில்ல
வாழ்க்கையின் வட்டத்துல
ஆசையை நெஞ்சிலே வச்சுப்புட்டா

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.