ஒண்ணு நூறாக்கி ஒத்த பாடல் வரிகள்

Movie Name
Melam Kottu Thali Kattu (1988) (மேளம் கொட்டு தாலி கட்டு)
Music
Premasiri Kemadasa
Year
1988
Singers
Krishnaraj
Lyrics
Pattukottai Nadarajan
ஒண்ணு நூறாக்கி ஒத்த நெல்லு கதிராச்சு
மண்ணெல்லாம் பொன்னளக்கும் எங்க சாமி
இது மானம் வீரம் காத்திருக்கும் மங்கல பூமி
இது மானம் வீரம் காத்திருக்கும் மங்கல பூமி

பொங்கணும் பொங்கணும் பாலு பொங்கணும்
பொங்கிய பொங்கலை அம்மனும் திங்கணும்
தங்கணும் தங்கணும் லட்சுமி தங்கணும்
சங்க தமிழகம் தழைச்சு நிக்கணும்

ஆடியிலே வெதச்ச வெத அம்மனருளில் மொளச்சு வந்தது
காத்து மழை நோயைத் தாங்கி கதிராக வெளஞ்சு நிக்குது
ஆடியிலே வெதச்ச வெத அம்மனருளில் மொளச்சு வந்தது
காத்து மழை நோயைத் தாங்கி கதிராக வெளஞ்சு நிக்குது

பூமியை நம்பித்தானே புள்ளைங்களை பெத்துக்கிட்டோம்
சாமிய நம்பிதாங்க சத்தியத்தில் கட்டுப்பட்டோம்
நம்பியவர் வாழ எங்கள் நாயகியே துணையிருப்பாள்
எண்ணம் போல வாழ்வு வந்தது
எடுத்த காரியம் ஜெயிச்சு நின்னது.....

ஒண்ணு நூறாக்கி ஒத்த நெல்லு கதிராச்சு
மண்ணெல்லாம் பொன்னளக்கும் எங்க சாமி
இது மானம் வீரம் காத்திருக்கும் மங்கல பூமி
இது மானம் வீரம் காத்திருக்கும் மங்கல பூமி
இது மானம் வீரம் காத்திருக்கும் மங்கல பூமி

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.