செந்தூரப் பொட்டு வெச்ச பாடல் வரிகள்

Last Updated: Sep 29, 2023

Movie Name
Melam Kottu Thali Kattu (1988) (மேளம் கொட்டு தாலி கட்டு)
Music
Premasiri Kemadasa
Year
1988
Singers
Krishnaraj, Seerkazhi Sivachidambaram
Lyrics
Pattukottai Nadarajan
செந்தூரப் பொட்டு வெச்ச சிங்காரி சிங்காரி
சிலுசிலுக்கிற காத்து பட்டு கிளுகிளுக்குது காஞ்சிப்பட்டு
முந்தானை பந்தாடும் ஒய்யாரி ஒய்யாரி
ஈரெட்டு வயசுக்காரி வாய் திறந்தா பொய்தான்டி
தளதளக்குற தக்காளியே பளபளக்குற பப்பாளியே

செந்தூரப் பொட்டு வெச்ச சிங்காரி சிங்காரி
சிலுசிலுக்கிற காத்து பட்டு கிளுகிளுக்குது காஞ்சிப்பட்டு
முந்தானை பந்தாடும் ஒய்யாரி ஒய்யாரி

சொந்த புத்தி ஏதுமில்ல சொன்னாலும் கேட்பதில்ல
அடக்கம் என்ன விலை அத மட்டும் சொல்லு புள்ள
பொடிப் பசங்க கூட்டத்துக்கு அக்கா ராணியே ஐயோ

மாடி வீட்டு திமிரு எல்லாம் மாமன் கிட்ட செல்லாது
மூணு முடிச்சு போட்டுப்புட்டா சின்னக்குட்டி அம்பேலு
கூர மேல ஏறினாலும் கோழி கோழிதானடி
வீரனுக்கு வீரன் தான் உன்ன அடக்கும் சூரன்தான்
ஆம்பளைக்கு ஆம்பளை உங்கப்பனுக்கு மாப்பிள்ள

செந்தூரப் பொட்டு வெச்ச சிங்காரி சிங்காரி
சிலுசிலுக்கிற காத்து பட்டு கிளுகிளுக்குது காஞ்சிப்பட்டு
முந்தானை பந்தாடும் ஒய்யாரி ஒய்யாரி

ஆம்பளைய போல இங்கே வம்புகள வளத்துக்கிட்டே
ஆளு மட்டும் வளந்துபுட்டே அறிவு மட்டும் வளரலையே
தெரு தெருவா சுத்தி வரும் தேரு பாருடா

அழகிருக்கிற தலகணத்துல குதிரையைப் போல் போறாடா
அத அடக்கிட கடிவாளத்த போடப்போறேன் நான்தான்டா
ஊரக் கூட்டி மாலை சூட்டி ஊர்கோலம் போவேன்டி
சவாலுக்கு சவாலு நாங்க எதுக்கும் தயாரு
மீசைக் கிட்டே மோதாதே மூக்கு ஒடைஞ்சு போகாதே ஹேய்

செந்தூரப் பொட்டு வெச்ச சிங்காரி சிங்காரி
சிலுசிலுக்கிற காத்து பட்டு கிளுகிளுக்குது காஞ்சிப்பட்டு
முந்தானை பந்தாடும் ஒய்யாரி ஒய்யாரி
ஈரெட்டு வயசுக்காரி வாய் திறந்தா பொய்தான்டி
தளதளக்குற தக்காளியே பளபளக்குற பப்பாளியே

செந்தூரப் பொட்டு வெச்ச சிங்காரி சிங்காரி
சிலுசிலுக்கிற காத்து பட்டு கிளுகிளுக்குது காஞ்சிப்பட்டு
முந்தானை பந்தாடும் ஒய்யாரி ஒய்யாரி

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.