கல கல கலவென காவிரி பாடல் வரிகள்

Last Updated: Jun 04, 2023

Movie Name
Koyil Maniyosai (1988) (கோயில் மணியோசை)
Music
Gangai Amaran
Year
1988
Singers
Gangai Amaran, K. S. Chitra
Lyrics
Gangai Amaran
பெண் : குக்கூ குக்கூ....
கல கல கலவென காவிரி நடக்குது
காதலன் கைத் தொட கடலிலே கலக்குதடி
கல கல கலவென காவிரி நடக்குது
காதலன் கைத் தொட கடலிலே கலக்குதடி

நீரும் நிலத்திற்கும் திருமணம் நடக்குது
யாருக்கு மாப்பிள்ளை யாருன்னு தெரிந்ததடி
கல கல கலவென காவிரி நடக்குது
காதலன் கைத் தொட கடலிலே கலக்குதடி

குழு : வயலெல்லாம் பாயும் நீரு..ஓஓஓஒ....
நீரில்ல எல்லாம் தேனு..ம்ம்ம்ம்.....
தேனப் போலொரு நீரும் பாயுது
தெக்கு காத்துல தாளம் போடுது ஹே ஹே ஹே

பெண் : வானத்துல மஞ்சப் பொடி பூசினது யாரு
நெத்தியில பொட்டு ஒண்ணு வச்சவக யாரு
வானத்துல மஞ்சப் பொடி பூசினது யாரு
நெத்தியில பொட்டு ஒண்ணு வச்சவக யாரு

கொடகு மலக் காத்துல குயிலு சத்தம் கேட்குது
குயிலு சத்தம் கேட்டதும் மயிலு எட்டிப் பாக்குது
காடெல்லாம் பூவாசம் மனசெல்லாம் சந்தோஷம்
மாலை சூட ஏங்குது...

கல கல கலவென காவிரி நடக்குது
காதலன் கைத் தொட கடலிலே கலக்குதடி
நீரும் நிலத்திற்கும் திருமணம் நடக்குது
யாருக்கு மாப்பிள்ளை யாருன்னு தெரிந்ததடி

ஆண் : ஏலேலேலோ....ஏலேலேலோ....
அத்த மக அந்தப் பக்கம் ஏலோஏலோஏலேலோ
அவ மச்சான் நானும் இந்தப் பக்கம் ஏலோஏலோஏலேலோ
ஏத்தத்துல போகும் நீரு எடுத்துச் சொல்லு
எனக்கொரு தூது ஏலோஏலோஏலேலோ

பெண் : சிட்டு ரெண்டு தொட்டுக்கிட்டு கட்டுது ஒரு பாட்டு
அத்த மக நெஞ்சு இப்போ சொக்குது அதக் கேட்டு
சிட்டு ரெண்டு தொட்டுக்கிட்டு கட்டுது ஒரு பாட்டு
அத்த மக நெஞ்சு இப்போ சொக்குது அதக் கேட்டு

வரப்ப விட்டு தாண்டுது வளர்ந்து விட்ட நாத்துதான்
வளச்சு போடப் பாக்குது அலையும் தெற்கு காத்துதான்
புரியாத இள மனசு அறியாத சிறு வயசு
நேரம் காலம் பாக்குது

கல கல கலவென காவிரி நடக்குது
காதலன் கைத் தொட கடலிலே கலக்குதடி
கல கல கலவென காவிரி நடக்குது
காதலன் கைத் தொட கடலிலே கலக்குதடி

நீரும் நிலத்திற்கும் திருமணம் நடக்குது
யாருக்கு மாப்பிள்ளை யாருன்னு தெரிந்ததடி
யாருக்கு மாப்பிள்ளை யாருன்னு தெரிந்ததடி....
 

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.