இந்த மான் பாடல் வரிகள்

Movie Name
Karakattakaran (1989) (கரகாட்டகாரன்)
Music
Ilaiyaraaja
Year
1989
Singers
Ilaiyaraaja, K. S. Chithra
Lyrics
Gangai Amaran
இந்த மான் உந்தன் சொந்த மான்
பக்கம் வந்து தான் சிந்து பாடும்
இந்த மான் உந்தன் சொந்த மான்
பக்கம் வந்து தான் சிந்து பாடும்

சிந்தைக்குள் ஆடும் ஜீவனே கண்மணியே...
சந்திக்க வேண்டும் தேவியே என்னுயிரே...

பெண் இந்த மான் உந்தன் சொந்த மான்
பக்கம் வந்த மான்

***
வேல் விழி போடும் தூண்டிலே
நான் விழலானேன் தோளிலே
நூலிடை தேயும் நோயிலே
நான் வரம் கேட்கும் கோயிலே
அன்னமே...ஆ...ஆ...ஆ...ஆ...ஆ...
அன்னமே எந்தன் சொர்ணமே
உந்தன் எண்ணமே வானவில் வண்ணமே
கன்னமே மது கிண்ணமே
அதில் பொன்மணி வைரங்கள் மின்னுமே
எண்ணமே தொல்லை பண்ணுமே
பெண் என்னும் கங்கைக்குள் பேரின்பமே

இந்த மான் உந்தன் சொந்த மான்
பக்கம் வந்து தான் சிந்து பாடும்
சிந்தைக்குள் ஆடும் ஜீவனே
கண்மணியே...
சந்திக்க வேண்டும் தேவனே
ஆண் என்னுயிரே...

***
பொன்மணி மேகலை ஆடுதே
உன் விழிதான் இடம் தேடுதே
பெண் உடல் பார்த்ததும் நாணுதே
இன்பத்தில் வேதனை ஆனதே
என்னத்தான்...ஆ...ஆ...ஆ...ஆ...ஆ...
என்னத்தான் உன்னை எண்ணிதான்
உடல் மின்னத்தான் வேதனை பின்னத்தான்
சொல்லித்தான் நெஞ்சை கிள்ளித்தான்
என்னை சொர்கத்தில் தேவனும் சோதித்தான்
மோகம் தான் சிந்தும் தேகம் தான்
தாகத்தில் நான் நிற்க ஆனந்தம்தான்

இந்த மான்
உந்தன் சொந்த மான்
பக்கம் வந்து தான்
சிந்து பாடும்

இந்த மான்
எந்தன் சொந்த மான்
பக்கம் வந்து தான்
சிந்து பாடும்
சிந்தைக்குள் ஆடும் ஜீவனே
கண்மணியே...
சந்திக்க வேண்டும் தேவியே
என்னவனே...

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.