சூரியனைக் கண்ட உடன் பாடல் வரிகள்

Movie Name
Parvathi Ennai Paradi (1993) (பார்வதி என்னை பாரடி)
Music
Ilaiyaraaja
Year
1993
Singers
S. Janaki
Lyrics
Vaali

சூரியனைக் கண்ட உடன் தாமரை ஏன் மலருது
சந்திரனைக் கண்ட உடன் அல்லி ஏன் மயங்குது
அது காதல் காதல் காதல் என்றே சொன்னாங்க
அந்தக் காதல் என்னும் சொல்லின் அர்த்தம் என்னாங்க(சூரியனை)

காதல் வந்தால் தூக்கம் போய் விடும் என்று
கதைகளிலே நானும் படித்தது உண்டு
சினிமா காதல் எல்லாம் பாத்திருக்கேன் நான்தான்
பிரிஞ்சா பாட்டெடுத்து பாடுறது ஏன்தான்

ஒண்ணும் தெரியாது நானும் தவிக்க
எத்தனையோ கேள்வி நெஞ்சைத் துளைக்க
என்னவென்று நீ சொல்ல வா வா ராஜா
அது காதல் காதல் காதல் என்றே சொன்னாங்க
அந்தக் காதல் என்னும் சொல்லின் அர்த்தம் என்னாங்க (சூரியனை)

மாலையில் ஏதேதோ வாட்டுது என்னை
மாளிகையில் நாளும் வாழ்ந்திடும் பெண்ணை
குளிரும் வான நிலா கொதிக்குதையா தீயா
எதுவோ மனசுக்குள்ளே படுத்துதையா நோயா

என்ன இந்த வியாதி நானும் அறியேன்
சொல்லத் தெரியாமல் தேகம் மெலிந்தேன்
என்னவென்று நீ சொல்ல வா வா ராஜா
அது காதல் காதல் காதல் என்றே சொன்னாங்க
அந்தக் காதல் என்னும் சொல்லின் அர்த்தம் என்னாங்க(சூரியனை)

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.