மனம் போன போக்கில் பாடல் வரிகள்

Movie Name
Kadhal Rojave (2000) (காதல் ரோஜாவே)
Music
Ilaiyaraaja
Year
2000
Singers
K. S. Chithra, S. P. Balasubramaniam
Lyrics
Vaali

மனம் போன போக்கில் போனேன் என் பாதையில்
விடிவெள்ளி ஒன்று கண்டேன் அதிகாலையில்
யார் நம்மை சேர்த்து வைத்தது
நம் கையில் என்ன உள்ளது
புது அன்பு ஒன்று தானே விளையாடுது
அது நெஞ்சில் நின்று தானே புதிர் போடுது

நீர் இல்லாத பாலையில் நிலவு போல நீயடி
நின்று காண இயலா வழிப் போக்கன் நானடி
நீ மறுத்த போதிலும் உன்னைத் தொடரும் வெண்ணிலா
வந்து ஒளியை வீசும் தினம் உந்தன் காலடி
கடல் நீரில் தாகம் தீருமா
கதைகள் இங்கே வாழ்கை ஆகுமா...(மனம்)

காதல் வரிகள் பாடினால் கானல் வரிகள் ஆகுமா
உனது கைகள் மீட்டும் புதுப் பொன்னின் வீணை நான்
வசந்தக் காலம் போன பின் குயில்கள் கூவக் கூடுமோ
வந்து போகும் வந்தம் வாழ்வில் என்று தோன்றுமோ

கடலோரம் ஆடும் நீரலை
ஒரு போதும் ஓய்வதில்லையே
மனம் போன போக்கில் போனேன் என் பாதையில்
விடிவெள்ளி ஒன்று கண்டேன் அதிகாலையில்

யார் நம்மை சேர்த்து வைத்தது
நம் கையில் என்ன உள்ளது
அது தெரிந்து போகும் நேரம் வழியனுப்பவா
உன்னை அறிந்து கொண்ட நேரம் நீ சென்று வா......

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.