Kalyana Jodi Kacheri Melam Lyrics
கல்யாண ஜோடி கச்சேரி மேளம் பாடல் வரிகள்
கல்யாண ஜோடி கச்சேரி மேளம்
நீ பாடு ராஜா உல்லாச ராகம்
பாடுகிற சொல்லு பல்லிக்கும் என்று சொல்லு
பாதை எங்கும் பூத்து பூ
மணக்க மணக்க மணக்க (கல்யாண)
புன்னகை மன்னனைப் பாரு மண மாலை தோள் மேலே
கோகுலக் கண்ணனுக்கேத்த ஒரு ராதை வாய்த்தாளே
அத்தனை கண்களும் பார்க்கும் இளம் ஜோடி சேர்ந்தாலே
மங்கல வாத்தியம் கேட்கும் திருநாளும் இந்நாளே
கை பிடிச்ச நேரம் சுப நேரம் ராஜ யோகம்
குங்குமம் பூவும் நலம் வாழும் கால காலம்
ஜோடி சேர்க்கிற வேலை எல்லாம்
சாமி செய்யும் வேலை
அது சகல பொருத்தமும் பாத்து பாத்து
இரண்டு மனச இணைக்கும்.....(கல்யாண)
கொண்டவன் போடுற கோட்ட
பொண்ணு தாண்டக் கூடாது
பத்தினி சொல்லுற சொல்ல மாமன் மீறக் கூடாது
இப்படி வாழுற வீடு திருக் கோயில் போல் ஆகும்
வள்ளுவன் சொன்னது போலே மண வாழ்வு மேலாகும்
நல்லதொரு தாரம் அவதாரம் சீதை ஆகும்
பண்புகளின் பாதை அவ போகும் பாதை ஆகும்
குழந்தை குட்டிங்க வாழும் இல்லம் பூமி மேலே சொர்க்கம்
அது சீனிச் சக்கரை பாகைப் போல
இறுதி வரைக்கும் இனிக்கும்.....(கல்யாண)
இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.