தொந்தரவு பண்ணாதீங்க பாடல் வரிகள்

Movie Name
Porantha Veeda Puguntha Veeda (1993) (பொறந்த வீடா புகுந்த வீடா)
Music
Ilaiyaraaja
Year
1993
Singers
Mano, K. S. Chitra
Lyrics
Vaali
பெண் : தொந்தரவு பண்ணாதீங்க
இப்ப மூணு புள்ளை நாலு புள்ளை ஆச்சு
உங்களுக்கு சேவை செஞ்சு
இந்த பொம்பளைக்கு இடுப்பொடிஞ்சு போச்சு

ஆண் : பாலூட்டும் வெண்ணிலவு
அடி சூடேத்தும் முன்னிரவு
இன்னைக்கு ஏத்துக்க நாளைக்கு போத்திக்க
பெண் : வேணாமய்யா வம்பு வேணாமய்யா..ஹ்ஹான்

பெண் : தொந்தரவு பண்ணாதீங்க
இப்ப மூணு புள்ளை நாலுப் புள்ளை ஆச்சு..
உங்களுக்கு சேவை செஞ்சு...ஹான்
இந்த பொம்பளைக்கு இடுப்பொடிஞ்சு போச்சு..ச்சே

ஆண் : வேலை வெட்டி பாத்துப்புட்டு
வீடு திரும்பும் ஆம்பளைக்கு
வாட்டமெல்லாம் தீர்த்து வைக்க
வேற சுகந்தான் என்ன இருக்கு

பெண் : அன்னாடந்தான் இந்த கூத்து
ஆகாதய்யா உன்னை தேத்து...ஹான்
கிண்ணாரந்தான் என்னைப் பார்த்து
போடாதய்யா மூக்கு வேர்த்து

ஆண் : நித்தம்தான் திங்கிறோம் சாப்பாடு
அத நிப்பாட்டி வைக்குற ஆள் யாரு.ஹ்ஹம்
பெண் : சாப்பாடு போலவா சரசம் என்பது
அது வேறுய்யா அட இது வேறுய்யா...யோவ்.

பெண் : தொந்தரவு பண்ணாதீங்க...ம்...
இப்ப மூணு புள்ளை நாலுப் புள்ளை ஆச்சு..ஏய்
உங்களுக்கு சேவை செஞ்சு..ஹாஹ்.ஹம்
இந்த பொம்பளைக்கு இடுப்பொடிஞ்சு போச்சு..போடி

பெண் : மாலை கட்டி மேளங் கொட்டி
தாலி முடிஞ்ச மாமனுக்கு
பேரு சொல்ல நாலுப் பிள்ளை
பெத்து எடுத்தேன் இன்னும் எதுக்கு

ஆண் : பதினாறும்தான் பெத்து வாழ
சொன்னாங்களே நம்ம பாத்து
பெண் : செல்வங்கள பதினாறா
சொன்னதுதான் அந்த வாழ்த்து

ஆண் : கில்லாடி பொம்பள நீதான்டி
பதில் நல்லாவே சொல்லுற யம்மாடி
பெண் : சொன்னாலும் ஏறல சொகுசு மாறல
நடக்காதய்யா...ஹான்...அது கிடைக்காதய்யா

பெண் : தொந்தரவு பண்ணாதீங்க...ஹ்ஹூம்
இப்ப மூணு புள்ளை நாலுப் புள்ளை ஆச்சு..ஸ்...
உங்களுக்கு சேவை செஞ்சு...ஏய்.
இந்த பொம்பளைக்கு இடுப்பொடிஞ்சு போச்சு

ஆண் : அட பாலூட்டும் வெண்ணிலவு
அடி சூடேத்தும் முன்னிரவு
இன்னைக்கு ஏத்துக்க நாளைக்கு போத்திக்க
பெண் : வேணாமய்யா வம்பு வேணாமய்யா..ஹ்ஹான்

பெண் : தொந்தரவு பண்ணாதீங்க
இப்ப மூணு புள்ளை நாலுப் புள்ளை ஆச்சு
உங்களுக்கு சேவை செஞ்சு
இந்த பொம்பளைக்கு இடுப்பொடிஞ்சு போச்சு..ஹைய்யோ...

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.