இளவேனில் இது பாடல் வரிகள்

Last Updated: May 30, 2023

Movie Name
Kadhal Rojave (2000) (காதல் ரோஜாவே)
Music
Ilaiyaraaja
Year
2000
Singers
K. S. Chithra, S. P. Balasubramaniam
Lyrics
Madhan Karky
இளவேனில் இது வைகாசி மாதம்
விழியோரம் மழை ஏன் வந்தது
புரியாதோ இளம் பூவே உன் மோகம்
நெருப்பாக கண்ணில் நீர் வந்தது
பனி மூட்டம் வந்ததா
மலர் தோட்டம் நீங்கியே
திசை மாறிப்போகுமோ தென்றலே
காதல் ரோஜாவே பாதை மாறாதே
நெஞ்சம் தாங்காதே.....ஓ....ஓ

இளவேனில் இது வைகாசி மாதம்
விழியோரம் மழை ஏன் வந்தது

என் மேனி நீ மீட்டும் பொன் வீணை என்று
அன்னாளில் நீ தான் சொன்னது
கையெந்தி நான் வாங்கும் பொன் வீணை இன்று
கை மாறி ஏனோ சென்றது
என் போன்ற ஏழை முடிவிழும் வாழை
உண்டானக் காயம் ஆறக்கூடுமா
காதல் ரோஜாவே கனலை மூட்டாதே
நீ கொண்ட என் நெஞ்சை தந்தால் வாழ்த்துவேன்

இளவேனில் இது வைகாசி மாதம்
விழியோரம் மழை ஏன் வந்தது
பனி மூட்டம் வந்ததா
மலர் தோட்டம் நீங்கியே
திசை மாறிப்போகுமோ தென்றலே
ஆஹ்ஹா......ஆஹ்ஹா........ஆஹ்ஹா....ஹா...ஆ....

கண்ணான கண்ணே உன் வாய் வார்த்தை நம்பி
கல்யாண தீபம் ஏற்றினேன்
என் தீபம் உன் கோயில் சேராது என்று
தண்ணீரை நானே ஊற்றினேன்
உன்னோடு வாழ இல்லையொரு யோகம்
நான் செய்த பாவம் யாரைச் சொல்வது

காதல் ரோஜாவே நலமாய் நீ வாழ்க
நீ சூடும் பூமாலை நான் போல் வாழ்கவே

இளவேனில் இள ராகங்கள் பாடும்
இளங்காற்றே எங்கே போகிறாய்
பூஞ்சோலை இது உன்னோடு வாழும்
இமைக்காமல் எனை ஏன் பார்க்கிறாய்
பனிமூட்டம் வந்ததா மலர்த் தோட்டம் நீங்கியே
திசை மாறிப் போகுமோ தென்றலே

காதல் ரோஜாவே உன்னைக் கூடாமல்
கண்கள் தூங்காது ஆ.........ஆ...........


இளவேனில் இள ராகங்கள் பாடும்
இளங்காற்றே எங்கே போகிறாய்

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.