புதுப் பொண்ணு மாப்பிள்ள பாடல் வரிகள்

Movie Name
Kadhal Rojave (2000) (காதல் ரோஜாவே)
Music
Ilaiyaraaja
Year
2000
Singers
K. S. Chithra, S. P. Balasubramaniam
Lyrics
Muthulingam

புதுப் பொண்ணு மாப்பிள்ள
தூக்கு டா தூக்கு டோலி டோலி
இந்த வைகை ஆத்துல
கூத்து டா கூத்து ஜாலி ஜாலி

துள்ளுதே சுந்தரிப் பொண்ணு
சொக்குதே மாப்பிள கண்ணு
சொல்லுதே சங்கதி ஒண்ணு ஹோய்
தொட்டுத்தான் கயில பின்னு கிட்டத்தான்
வெக்கத்த விட்டு வந்தது சிட்டு ஹோய்..(புதுப்)

ஒரு தோகை மயில் அன்ன நடைதான் பழகி
இரு கண் வழியே நெஞ்சுக்குள்ள போனதென்ன
சிறு கானக் குயில் வண்ண வண்ண சொல்லெடுத்து
புதுக் கவிதைகளை காதில் வந்து சொல்வதென்ன

ஆத்தோரம் அந்தி மயங்கும் நேரம்
கொஞ்சம் பேசிட வேணும்
பூத்தாடும் புன்னை மரத்தின் ஓரம்
ஓ... ஓ... காத்தோடு சொல்லி அழைச்ச சேதி
அது வந்ததும்
யாரும் காணாமல் சொல்லி விடையா மீதி

பூஞ்சோலையில் மாலையில் புது லீலைகள்தான்
ஹோய் ஆரம்பம் ஆகட்டும் சுக வேளைகள்தான்
விட்டு விலகாது விடியும் மட்டும் கதை படிப்போமா
புதுப் பொண்ணு மாப்பிள்ள.....

நீரோடையிலே நீ குளிக்கும் வேளையிலே
பூ மஞ்சளத்தான் உன் முகத்தில் தேய்க்கட்டுமா
நீ தேய்க்கயிலே தண்ணி அள்ளி ஊத்தயிலே
ஓம் மார்பினிலே அல்லிக் கொடி சாயட்டுமா

பூ மானே எதுக்கு இங்கே கேள்வி
எம் மனசுக்குள்ளே நீ தானே குடியிருக்கும் தேவி
ஓ... ஓ... வில்லாலே என்னை அடிச்சான் பாவி
அவன் திமிரடங்க வாய்யா நீ துள்ளிக் குதிச்சு தாவி

இந்த சாமந்திப் பூவுக்குள் தேனும் இருக்கு
அந்தப் பூச்சிந்தும் தேன் இங்கு என்றும் உனக்கு
கட்டில் போட்டாலே அள்ளிக் கொடுப்பேன்
கிள்ளிக் கொடுப்பேன் ஹோய்...(புதுப்)

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.