கட்டிலின் மேலே இருக்குது பாடல் வரிகள்

Movie Name
Samsarame Saranam (1989) (சம்சாரமே சரணம்)
Music
Shankar-Ganesh
Year
1989
Singers
K. Veeramani
Lyrics
Gangai Amaran
கட்டிலின் மேலே இருக்குது மெத்தை
கட்டிக்கிட்டேனே நானொரு முத்தை
கட்டிலின் மேலே இருக்குது மெத்தை
கட்டிக்கிட்டேனே நானொரு முத்தை

சம்சாரமே சரணமடி நீ சம்மதிச்சு வரணுமடி
சம்சாரமே சரணமடி நீ சம்மதிச்சு வரணுமடி
கட்டிலின் மேலே இருக்குது மெத்தை
கட்டிக்கிட்டேனே நானொரு முத்தை

கல்யாண நாளில் மாலை அணிந்து
நேர்த்தியாகவே விரதம் முடித்து
பார்த்த பார்வையில் விழுந்தவன் உன்
பார்வைக்காகவே தவித்தவன்

இரு கரம் எடுத்து எனை ஆதரித்து
ஒரு மனதாகி உயிராய் இருந்து
இருவரும் இணைந்து இன்பத்தை பகிர்ந்து
இருந்திட வேண்டும் கண்மணியே
இந்த வரம் தரவேண்டும் பெண்மணியே

சம்சாரமே சரணமடி நீ சம்மதிச்சு வரணுமடி
சம்சாரமே சரணமடி நீ சம்மதிச்சு வரணுமடி

பொண்டாட்டி பேச்சை கேட்டிடும் பேர்க்கு
பொன்னும் மணியும் குவிந்திடும் பாரு
வீராதி வீரர்களிடையிலே அவர்
பொண்டாட்டிதாசன் வீட்டிலே

தலையணை இருக்கு மந்திரம் போட
கலைகளை பாடும் தந்திரத்தோட
ஒருவரையொருவர் புரிந்து நடந்தால்
உத்தமமான வாழ்க்கையடா இதை
உணர்ந்து நடந்து வாழுங்கடா

சம்சாரமே சரணமடி நீ சம்மதிச்சு வரணுமடி
சம்சாரமே சரணமடி நீ சம்மதிச்சு வரணுமடி
கட்டிலின் மேலே இருக்குது மெத்தை
கட்டிக்கிட்டேனே நானொரு முத்தை

சம்சாரமே சரணமடி நீ சம்மதிச்சு வரணுமடி
சம்சாரமே சரணமடி நீ சம்மதிச்சு வரணுமடி

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.