தொடாமல் உதிரும் தாமரையே பாடல் வரிகள்

Movie Name
My Dear Lisa (1987) (மை டியர் லீசா)
Music
Raghu Kumar
Year
1987
Singers
K. J. Yesudas
Lyrics
Gangai Amaran
தொடாமல் உதிரும் தாமரையே 
என் வான வெளியின் தாரகையே 
பறந்து வரும் கிளியோ 
நீ உருகி வரும் ஸ்வர நதியோ..ஆஆஆ....
தொடாமல் உதிரும் தாமரையே 
என் வான வெளியின் தாரகையே..

விரிந்து படர்ந்த மேகம் வானம்
நமக்கு இயற்கையின் வீடாகும்..ஆஆஆ...
விரிந்து படர்ந்த மேகம் வானம்
நமக்கு இயற்கையின் வீடாகும்

இதழில் படரும் தாகம் இறங்கும் 
இதழில் படரும் தாகம் இறங்கும்
ஏங்கும் காரணம் புரியும் 
நீயும் நானும் நீயும் நானும் 
சேர்ந்திடும் காரணம் அறியும்

தொடாமல் உதிரும் தாமரையே 
என் வான வெளியின் தாரகையே...

நிலாவின் பார்வையில் நீ வரும் நேரம் 
நினைந்து பாடிடும் சங்கீதம்...ஆஆஆஆ...
நிலாவின் பார்வையில் நீ வரும் நேரம் 
நினைந்து பாடிடும் சங்கீதம்...

இங்கே காதல் திருமண கூடம்
இங்கே காதல் திருமண கூடம்
காதல் கைகளும் கூடும் 
நீயும் நானும் நீயும் நானும் 
என்றோ ஒன்றென ஆனோம்

தொடாமல் உதிரும் தாமரையே 
என் வான வெளியின் தாரகையே 
பறந்து வரும் கிளியோ 
நீ உருகி வரும் ஸ்வர நதியோ..ஆஆஆ....
தொடாமல் உதிரும் தாமரையே 
என் வான வெளியின் தாரகையே..

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.