இதுவரை இல்லாத பாடல் வரிகள்

Movie Name
Goa (2010) (கோவா)
Music
Yuvan Shankar Raja
Year
2010
Singers
Andrea Jeremiah
Lyrics
Gangai Amaran
ம் ம் ம் ம்
ம் ம் ம் ம்
(இசை)

ம் ம் ம் ம்
ம் ம் ம் ம்
(இசை)

பெண்: இதுவரை இல்லாத உணர்விது
இதயத்தில் உண்டான கனவிது
பலித்திடும் அந்நாளை தேடிடும்
பாடல் கேட்டாயோ

பெண்: இதுவரை இல்லாத உணர்விது
இதயத்தில் உண்டான கனவிது
பலித்திடும் அந்நாளை தேடிடும்
பாடல் கேட்டாயோ

பெண்: மூடாமல் மூடி மறைத்தது
தானாக பூத்து வருகுது
தேடாமல் தேடி கிடைத்தது இங்கே

பெண்: மூடாமல் மூடி மறைத்தது
தானாக பூத்து வருகுது
தேடாமல் தேடி கிடைத்தது இங்கே

(இசை)

பெண்: இங்கே ஒரு இன்பம் வந்து நிறைய
எப்போது என் உண்மை நிலை அறிய
தாங்காமலும் தூங்காமலும் நாள் செல்லுதே
இல்லாமலே நித்தம் வரும் கனவு கொல்லாமல் கொல்ல
சுகம் என்னென்று சொல்ல
நீ துணை வர வேண்டும்
நீண்ட வழி என் பயணம் ஓ... ஓ...

(இசை)

ஆண்: அங்கே அங்கே வந்து வந்து கலக்கும்
வெண்மேகமும் வெண்ணிலவும் போல
எந்தன் மன எண்ணங்களை யார் அறிவார்
என் நெஞ்சமோ உன் போல அல்ல
ஏதோ ஓர் மாற்றம்
நிலை புரியாத தோற்றம்

பெண்: இது நிரந்தரம் அல்ல
மாறிவிடும் மன நிலை தான்
ஓ ஓ ஹோ ...
(இசை)

ஆண்: மனதிலே உள்ளூறும் உணர்வுகள்
மலர்ந்ததே முத்தான உறவுகள்
திறந்ததே தன்னாலே கதவுகள்
நமக்கு முன்னாலே

ஆண்: மனதிலே உள்ளூறும் உணர்வுகள்
மலர்ந்ததே முத்தான உறவுகள்
திறந்ததே தன்னாலே கதவுகள்
நமக்கு முன்னாலே

ஆண்: தேகம் இப்போது உணர்ந்தது
தென்றல் என் மீது படர்ந்தது
மோகம் முன்னேறி வருகுது முன்னே

ஆண்: தேகம் இப்போது உணர்ந்தது
தென்றல் என் மீது படர்ந்தது
மோகம் முன்னேறி வருகுது முன்னே

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.