மாலை நேரம் மழைத்தூரும் பாடல் வரிகள்

Last Updated: Jun 02, 2023

Movie Name
Aayirathil Oruvan (2010) (ஆயிரத்தில் ஒருவன்)
Music
G. V. Prakash Kumar
Year
2010
Singers
Vairamuthu
Lyrics
Vairamuthu
மாலை நேரம் மழைத்தூரும் காலம்
என் ஜன்னல் ஓரம் நிற்க்கிறேன்
நீயும் நானும் ஒருப்போர்வைக்குள்ளே
சிலு மேகம் போலே மிதக்கிறேன்
ஓடும் காலங்கள் உடன் ஓடும் நினைவுகள்
வழிமாறும் பயணங்கள் தொடர்கிறதே
இதுதான் வாழ்க்கையா ஒரு துணைதான் தேவையா
மனம் ஏனோ என்னையே கேட்கிறதே
ஓ காதல் இங்கே ஓய்ந்தது
கவிதை ஒன்று முடிந்தது
தேடும் போதே தொலைந்தது அன்பே
இது சோகம் ஆனால் ஒரு சுகம்
நெஞ்சின் உள்ளே பரவிடும்
நாம் பழகிய காலம் பரவசம் அன்பே
இதம் தருமே

உன் கரம் கோர்க்கையில்
நினைவு ஓராயிரம்
பின் இருகரம் பிரிகையில் நினைவு நூறாயிரம்
காதலில் விழுந்த இதயம் மீட்க்க முடியாதது
கணவில் தொலைந்த நிஜங்கள் மீண்டும் கிடைக்காதது
ஒரு காலையில் நீயில்லை தேடவும் மனம் வரவில்லை
பிரிந்ததும் புரிந்தது நான் என்னை இழந்தேன் என.. (ஓ காதல்)

ஒரு முறை வாசலில் நீயாய் வந்தால் என்ன
நான் கேட்கவே துடித்திடும் வார்த்தை சொன்னால் என்ன
இரு மனம் சேர்கையில் பிழைகள்
பொறுத்துக்கொண்டால் என்ன
இரு திசைப்பறவைகள் இணைந்தே
விண்ணில் சென்றால் என்ன
என் தேடல்கள் நீ இல்லை
உன் கனவுகள் நான் இல்லை
இருவிழிப் பார்வையில் நாம் உருகி நின்றால் என்ன...

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.