நீலாங்கரையில் கானாங்குருவி பாடல் வரிகள்

Last Updated: Sep 29, 2023

Movie Name
Pulivaal (2014) (புலிவால்)
Music
N. R. Raghunanthan
Year
2014
Singers
Vairamuthu
Lyrics
Vairamuthu
நீலாங்கரையில் கானாங்குருவி
தானா தவிக்குதே

வானம் திறந்து வைய்யம் கடந்து
பறப்போம் காற்றிலே

உடம்பிலிருந்து உசிர மட்டும்
உருவி உருவி இழுக்காதே

மாச மாசம் டீசல் வில போல
ஆச பாசம் ஏத்தாதே

புடவ தொவைக்கும் துறவிய போல
முழியா முழிக்கிறேன்

புலிவால் புடிச்ச எலிய போல
தவியா தவிக்கிறேன்

நீலாங்கரையில் கானாங்குருவி
தானா தவிக்குதே

வானம் திறந்து வைய்யம் கடந்து
பறப்போம் காற்றிலே

பட்டா போட்ட தங்கக் கட்டி
பட்டாம்பூச்சி போட்ட குட்டி
ஒத்து போகும் காதலியெல்லாம்
ஃப்டி ஃப்டி பொண்டாட்டி

கன்னிப்பொண்ணு ஓரங்கட்டி
கன்னங்கிள்ளி கண்ணை கட்டி
காதல் பண்ணும் பூனைக குட்டி
எட்டி நில்லு நான் கெட்டி

காதல் எறும்பு ஊரும் போது
கல்லுக்கூட தேயுமே
தூர பார்த்து நின்ற பெண்மை
தோளில் வந்து சாயுமே

நீ தொட தொட உச்சந்தலை கொதிக்குது
விரல் பட பட உள்ளங்காலு குளிருது

நீ சண்டைக்காரி ஆகும்போது பதறுது
என் மண்டைக்குள்ள நட்சத்திரம் சிதறது

புலிவால் புடிச்ச எலிய போல
தவியா தவிக்கிறேன்

புடவ தொவைக்கும் துறவிய போல
முழியா முழிக்கிறேன்

நீலாங்கரையில் கானாங்குருவி
தானா தவிக்குதே

வானம் திறந்து வைய்யம் கடந்து
பறப்போம் காற்றிலே ஏய்…

செல்போன் மொழி பேசி பேசி
சின்ன பொண்ண கெடுக்காதே நீ
நூலாம்படை நூலை கட்டி
கோயில் தேரை இழுக்காதே

வெள்ளக்காரன் போகும்போதே
வெட்கம் கூட போயே போச்சே
காலம் இப்போ ஹைக்டெக் ஆச்சே
கையை விட்டு போகாதே

பெண்கள் கொண்ட ஆசையெல்லாம்
ஃபிரிட்ஜில் வைத்த ஆப்பிள் போல
ஆண்கள் கொண்ட ஆசையெல்லாம்
வெயிலில் வைத்த வெண்ணை போல

நீ வர வர வக்கிலுக்கு படிக்கிற
நீ வாதம் பண்ணி வாதம் பண்ணி ஜெயிக்கிற

நீ முட்டாளுனு நம்பவச்சு நடிக்கிற
உன் முட்ட கண்ணில் ரெட்ட முயல் புடிக்கிற

புடவ தொவைக்கும் துறவிய போல
முழியா முழிக்கிறேன்

புலிவால் புடிச்ச எலிய போல
தவியா தவிக்கிறேன்

நீலாங்கரையில் கானாங்குருவி
தானா தவிக்குதே

வானம் திறந்து வைய்யம் கடந்து
பறப்போம் காற்றிலே

உடம்பிலிருந்து உசிர மட்டும்
உருவி உருவி இழுக்காதே

மாச மாசம் டீசல் வில போல
ஆச பாசம் ஏத்தாதே

புடவ தொவைக்கும் துறவிய போல
முழியா முழிக்கிறேன்

புலிவால் புடிச்ச எலிய போல
தவியா தவிக்கிறேன்

நீலாங்கரையில் கானாங்குருவி
தானா தவிக்குதே

வானம் திறந்து வைய்யம் கடந்து
பறப்போம் காற்றிலே

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.