பார்க்காதே பார்க்காதே பாடல் வரிகள்

Movie Name
Gentleman (1993) (ஜென்டில் மேன்)
Music
A. R. Rahman
Year
1993
Singers
Minmini, Srinivas
Lyrics
Vairamuthu
பார்க்காதே பார்க்காதே பஞ்சாங்கத்தை பார்க்காதே
தள்ளாதே தள்ளாதே தாவணிய தள்ளாதே

கிள்ளாதே கிள்ளாதே கிளி மனசை கிள்ளாதே
கொல்லாதே கொல்லாதே டீன் ஏஜை கொல்லாதே
வாழ்க்கை வாழத்தேனே

பார்க்காதே பார்க்காதே பஞ்சாங்கத்தை பார்க்காதே
தள்ளாதே தள்ளாதே தாவணிய தள்ளாதே

பருவ பொண்ணு கிட்ட பாகவதம் பேசாதே
பேசாதே பேசாதே பெரிய வார்த்தை பேசாதே

சைவர் மயிலில் வந்தா சக்தியின்னு தள்ளாதே
கொல்லாதே கொல்லாதே கொஞ்சி கொஞ்சி கொல்லாதே

பூக்கும் பூவெல்லாம் பூஜைக்குன்னு எண்ணாதே
பொண்ணுக்கும் பூ பிடிக்கும் மறந்துவிடாதே

திருமணம் கேட்கிறேன் திருநீரா கேட்கிறேன்
தேதிய சொல்லி விடு மனமே மனமே

பார்க்காதே பார்க்காதே பஞ்சாங்கத்தை பார்க்காதே
தள்ளாதே தள்ளாதே தாவணிய தள்ளாதே

படுக்கை தூக்கத்துக்கே படைச்சதுன்னு எண்ணாதே
போடாதே போடாதே புதிய சட்டம் போடாதே

காஷ்மீர் இருக்கையிலே காசியைதான் எண்ணாதே
ஆடாதே ஆடாதே அத்துமீறி ஆடாதே

கன்னியிளம் பூங்குயில் கடற்கரையில் வருகையில்
சுண்டலே பீச்சுன்னு சொக்கி விடாதே

பறவை ஆகாமல் பட்டு புழுவாய் போகாதே
இப்போது வாழ்ந்து விடு இன்றே இன்றே

பார்க்காதே பார்க்காதே பஞ்சாங்கத்தை பார்க்காதே
தள்ளாதே தள்ளாதே தாவணிய தள்ளாதே

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.