தாயும் கொஞ்ச காலம் பாடல் வரிகள்

Last Updated: Sep 29, 2023

Movie Name
Kangaroo (2014) (கங்காரு)
Music
Srinivas
Year
2014
Singers
Hariharasudan
Lyrics
Vairamuthu
கருவழியா வந்ததெதுவும் நிரந்தரம் இல்ல
கட்டையில போற வரையில் சுதந்திரம் இல்ல
இங்கு சுதந்திரம் இல்ல
எதுவும் நிரந்தரம் இல்ல
தாயும் கொஞ்ச காலம் தகப்பனும் கொஞ்ச காலம்
ஊரும் கொஞ்ச காலம் அந்த உறவும் கொஞ்ச காலம்
தாயும் கொஞ்ச காலம் தகப்பனும் கொஞ்ச காலம்
ஊரும் கொஞ்ச காலம் அந்த உறவும் கொஞ்ச காலம்
நெனச்சு நெனச்சு பாத்தாக்கா நீயும் கொஞ்ச காலம்
உன் நெனைப்பும் கொஞ்ச காலம்
சரித்திரத்து மன்னர்களும் கொஞ்ச கொஞ்ச காலம்
அந்த சந்திரரும் சூரியரும் இன்னும் கொஞ்ச காலம்
தாயும் கொஞ்ச காலம் தகப்பனும் கொஞ்ச காலம்
ஊரும் கொஞ்ச காலம் அந்த உறவும் கொஞ்ச காலம்

 எட்டாத மல மேல கடவுள் இருக்குது
அத எட்டிவிட மனுஷபைய இதயம் துடிக்குது
சொந்த பந்தம் ஓடி வந்து கால இழுக்குது
அட சொத்து பத்து ஆசை வந்து கைய அமுக்குது
காமம் வேற கடைசி வரைக்கும் கழுத்த புடிக்குது
காமம் வேற கடைசி வரைக்கும் கழுத்த புடிக்குது
இதில் கடவுள் கிட்ட போற வழி எங்க இருக்குது
கட்டையில போற வரைக்கும் சுதந்திரம் இல்ல
கருவழியா வந்ததெதுவும் நிரந்தரம் இல்ல
தாயும் கொஞ்ச காலம் தகப்பனும் கொஞ்ச காலம்
ஊரும் கொஞ்ச காலம் அந்த உறவும் கொஞ்ச காலம்

முப்பதுக்கு மேல உனக்கு முடி உதிருது
அட நாப்பதுக்கு மேல பார்வை அடுக்கமாகுது
அம்பதுக்கு மேல பல்லு ஆடிப்போகுது
அறுபதுக்கு மேல ஆண்மை அடங்கி போகுது
உடம்போட பொறந்ததெல்லாம் உன்ன பிரியுது
உடம்போட பொறந்ததெல்லாம் உன்ன பிரியுது
இதில் உன்கூட பொறந்ததுவா இருக்க போவுது
கட்டையில போற வரைக்கும் சுதந்திரம் இல்ல
கருவழியா வந்ததெதுவும் நிரந்தரம் இல்ல
தாயும் கொஞ்ச காலம் தகப்பனும் கொஞ்ச காலம்
ஊரும் கொஞ்ச காலம் அந்த உறவும் கொஞ்ச காலம்
நெனச்சு நெனச்சு பாத்தாக்கா நீயும் கொஞ்ச காலம்
உன் நெனைப்பும் கொஞ்ச காலம்
சரித்திரத்து மன்னர்களும் கொஞ்ச கொஞ்ச காலம்
அந்த சந்திரரும் சூரியரும் இன்னும் கொஞ்ச காலம்
இன்னும் கொஞ்ச காலம்

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.