உழுக்கு நிலவே பாடல் வரிகள்

Movie Name
Kangaroo (2014) (கங்காரு)
Music
Srinivas
Year
2014
Singers
Bibin Tuttu
Lyrics
Vairamuthu
ஆராரிராரோ ஆராரிரோ
ஆராரிராரோ ஆராரிரோ

உழுக்கு நிலவே ஆராரோ
உனக்கு நானே தாயாரோ
அழுக்கு தங்கமே ஆராரோ
எனக்கு நீதான் தாயாரோ
எட்டு வச்ச நிலவே கண்ணுறங்கு
கொட்டி வச்ச நட்சத்திரம் கண்ணுறங்கு
எல்லாமே தொலைஞ்சாலும் என் சொத்து நீதானே
சாமிக்கு பிறகு நீதானே உறவு
நான் சாகும் போது கூட இரு ஆத்தா ஆத்தா
உழுக்கு நிலவே ஆராரோ
உனக்கு நானே தாயாரோ

அடி ஏழை வீட்டு வாழப்பூவே இன்னும் என்ன அச்சம்
உன் புன்னகை மட்டும் போகும் பத்து லட்சம்
உன் கண்ணாடி கண்ணு மேலே காணும் சின்ன மச்சம்
அது கடவுள் வச்ச திருஷ்டி பொட்டின் உச்சம்
நீ மச்சக்காரி புகழ் உச்சக்காரி நான் பிச்சக்காரன்
ஏ தர்மத்தையே நீ தங்கக்கட்டி நான் தகரப்பெட்டி ஹோ..
உள்ளங்கை மாலையே உசுருள்ள சிலையே
உன் தந்தை தாயாக வந்தேன் நானாக வா
உழுக்கு நிலவே ஆராரோ
உனக்கு நானே தாயாரோ

நான் பொத்தி பொத்தி வச்ச பூவாழக்கன்னு
முதல் மொட்டு விட்டு பூத்துப்போச்சு நின்னு
அட உத்து உத்து பாக்குதய்யா ஊரு சனம் நின்னு
ஒரு அம்மன் கோயில் சிற்பம் காணோமின்னு
ஏ கன்னித்தேனே உனை காக்கத்தானே அட நான் வந்தேனே
என் அன்பும் நீயே என் ஆயுள் நீயே என் சாவும் நீயே
வேட்டைக்கு தப்பிச்ச காட்டானை நான் தானே
மதயானைக்கேத்த அங்குசம் யாரு நீதானே
உழுக்கு நிலவே ஆராரோ
உனக்கு நானே தாயாரோ

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.