கனவே கனவே பாடல் வரிகள்

Movie Name
Ambikapathy (2013) (அம்பிகாபதி)
Music
A. R. Rahman
Year
2013
Singers
A. V Pooja, Chinmayi, Madhushree
Lyrics
Vairamuthu
ச த நிரி ஆ... ச த ஆ...
கமதநித நிரிச நிபக ரிகமகப ரிகபச
கம தத நிநி சநிதப ரிகமதப ரிச ஆ... ஆ...
கம தத நிநி நிகரிகசரிச ஆ... ஆ... ஆ...

கனவே கனவே உன் கண்ணில் இருக்கு
வினாவு வினாவு உன் நெஞ்சில் இருக்கு
கனவே கனவே உன் கண்ணில் இருக்கு
வினாவு வினாவு உன் நெஞ்சில் இருக்கு

விட்டுக்குள் மான்கள் படியெடுத்தோட
பச்சை கிளி கூட்டம் பாட்டுக்கள் பாட
திருமண வீடு திக்கு முக்கு ஆட

குயிலே நடத்து ஒரு குட்டி கலாட்டா
சுவை இல்லை ஒரு சண்டை இல்லாடா
ஹ... குள்ளி வரும் ஆறு என்று தேங்குவது இல்லை
திருமண வீடென்று தூங்குவது இல்லை
பாட்டிகள் எல்லாம் தாவணி போட
தாத்தாக்கள் எல்லாம் ஜீன்ஸ் உடன் ஆட
வான்டுகள் எல்லாம் கை கொட்டி பாட

ஊரும் உறவும் இங்கு ஒன்றுபட்டாலே
வீடு வாசல் அது ரெண்டு படாதோ
தேனின் முகத்தில் ஒரு ஈ ஓட்டாதே
எங்கள் அகத்தின் துயிர் நில்லாதே
காற்றுக்கு கவலை ஓ... பட தெரியாதே
மருதானி பூசி மஹாராணி ஆவோம்
வர்ணங்கள் கோர்த்து வானவில் செய்வோம்

ஓ வாழை மரம் சேலை கட்டாதோ கட்டாதோ
வாசலெல்லாம் வின்மீன் கொட்டாதோ கொட்டாதோ
நாதஸ்வரங்கள் மழை கொட்டாதோ கொட்டாதோ
நாடி நரம்பில் இன்பம் சொட்டாதோ சொட்டாதோ
ஆகாயம் கையில் எட்டாதோ எட்டாதோ
தெய்வம் வந்து கதவை தட்டாதோ தட்டாதோ
தேவதைகள் பல்லான்டு பாடாதோ பாடாதோ
திருமணமே சொர்கம் என்று ஆகாதோ ஆகாதோ

ஓ... விண்ணும் மண்ணும் கூடி வாழ்த்துமே
மன மக்கள் வாழ்க மங்களம் வாழ்க...
மங்களம் வாழ்க மங்களம் வாழ்க

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.