அடி யாரது யாரது பாடல் வரிகள்

Movie Name
Mettukudi (1996) (மேட்டுக்குடி)
Music
Sirpi
Year
1996
Singers
Mano, Sirpi, Swarnalatha, Vairamuthu
Lyrics
Vairamuthu
அடி யாரது யாரது அங்கே என் காதல் தேவதையா
பறிபோனது போனது நெஞ்சம் இது வாலிப சோதனையா
அடி யாரது யாரது அங்கே என் காதல் தேவதையா
பறிபோனது போனது நெஞ்சம் இது வாலிப சோதனையா
பனிரோஜக் தோட்டம் தான் ஒரு சேலை கட்டியதா
அட உந்தன் கண் இன்று என் மேலே ஒட்டியதா
நீ கனவா கற்பனையா ?
அட இன்னும் தெரியலயா….
அடி யாரது யாரது அங்கே என் காதல் தேவதையா
பறிபோனது போனது நெஞ்சம் இது வாலிப சோதனயா

என் சேலைச் சோலைக்குள் முதல் பூவை பறித்தாயே
என்னை மிச்சம் இல்லாமல் நீ அள்ளி குடித்தாயே
முதல் பார்வையிலே என்னை நீ கொள்ளை அடித்தாயே
என் உள்ளம் முழுவதிலும் நீ வெள்ளை அடித்தாயே
நீ மலரில் பிறந்தவளா, இல்லை நிலவில் வளர்ந்தவளா
அந்த காமன் வீட்டுக்கு ஒரு ஜன்னல் திறந்தவளா
அட இன்னும் தெரியலயா ? நான் உந்தன் துணை இல்லையா ?

அடி யாரது யாரது அங்கே என் காதல் தேவதையா
பறிபோனது போனது நெஞ்சம் இது வாலிப சோதனையா

ஒரு சிப்பியில் முத்தை போல் என்னை மூடிக் கொள்வாயா
உன் அழகில் தொலைந்தவனை நீ தேடித் தருவாயா
உன் கனவில் நனைக்கின்றேன் நீ குடைகள் தருவாயா
நான் கொஞ்சம் தூங்குகிறேன் நீ தலையணை ஆவாயா
நீ காதல் ஓவியனா, ஒரு தனிமை நாயகனா
நான் தேடும் மன்மதனா என் அழகின் காவலனா
அட போதும் அம்மம்மா..நாம் கைகள் இணைவோமா ?

அடி யாரது யாரது அங்கே என் காதல் தேவதையா
பறிபோனது போனது நெஞ்சம் இது வாலிப சோதனையா
அடி யாரது யாரது அங்கே என் காதல் நாயகனா
பறிபோனது போனது நெஞ்சம் இது வாலிப சோதனையா
பனிரோஜக் தோட்டம் தான் ஒரு சேலை கட்டியதா
அட உந்தன் கண் இன்று என் மேலே ஒட்டியதா
நீ கனவா கற்பனையா ?
அட இன்னும் தெரியலயா….

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.