இதற்கு பெயர் தான் பாடல் வரிகள்

Movie Name
Pooveli (1998) (பூவேலி)
Music
Bharathwaj
Year
1998
Singers
Hariharan, Sujatha Mohan
Lyrics
Vairamuthu
காண்பதில் எல்லாம் தலைகீழ் தோற்றம்
என்னோடு ஏனோ இத்தனை மாற்றம்

பூமி என்பது தூரம் ஆனதே
நட்சத்திரங்கள் பக்கம் ஆனதே
மனிதர் பேசும் பாஷை மறந்து
பறவைகளோடு பேச தோனுதே

காணும் பிம்பம் கண்ணில் மறைந்து
காணா உருவம் கண்ணில் தோனுதே
அன்பு திருமுகம் தேடி தேடி
கண்கள் என்னை தாண்டி போகுதே

இதற்கு பெயர் தான் காதலா… காதலா….
இதற்கு பெயர் தான் காதலா

புரியா மொழியோ புரிந்து போகும்
புரிந்த மொழியோ மறந்து போகும்
சரியாத உடை சரி செய்வதாக
சரியாய் இருந்தும் சரிய செய்யும்

நிலவை போலவே இருளும் பிடிக்கும்
உணவை போலவே பசியும் ருசிக்கும்
எந்த பேனா வாங்கும் பொழுதும்
என்னவள் பெயர் தான் எழுதி பார்க்கும்

இதற்கு பெயர் தான் காதலா
இதற்கு பெயர் தான் காதலா

கண்ணாடி முன்னே பேசி பார்த்தால்
வார்த்தைகள் எல்லாம் முண்டி அடிக்கும்
முன்னாடி வந்து பேசும் பொழுதோ
வார்த்தைகள் எல்லாம் நொண்டி அடிக்கும்

பாதி பார்வை பார்க்கும் போதே
பட்டாம் பூச்சிகள் நெஞ்சில் பறக்கும்
கல்லில் இருந்தும் கவிதை முளைக்கும்
காகிதம் மணக்கும் கண்ணீர் இனிக்கும்

இதற்கு பெயர் தான் காதலா… காதலா….
இதற்கு பெயர் தான் காதலா

கண்கள் என்னும் இரண்டு ஜன்னல்
திறந்து வைத்தும் மூடி கொள்ளும்
இதயம் என்னும் ஒற்றை கதவு
மூடி வைத்தும் திறந்து கொள்ளும்

நீ என்பது நீ மட்டும் அல்ல
மூளையின் மூலையில் ஒரு குரல் கேட்கும்
நான் என்பதில் இன்னொரு பாதி
யார் என்பதே இதயம் கேட்கும்

இதற்கு பெயர் தான் காதலா
இதற்கு பெயர் தான் காதலா

இதற்கு பெயர் தான் காதலா
இதற்கு பெயர் தான் காதலா

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.