பாட வந்ததோ கானம் பாடல் வரிகள்

Movie Name
Ilamai Kaalangal (1983) (இளமை காலங்கள்)
Music
Ilaiyaraaja
Year
1983
Singers
K. J. Yesudas, P. Susheela
Lyrics
Vairamuthu
பாட வந்ததோ கானம் 
பாவை கண்ணிலோ நாணம்
கள்ளூறும் பொன் வேளை 
தள்ளாடும் பெண் மாலை
இளமை வயலில் அமுத மழை விழ

ராஜமாலை தோள் சேரும் 
நாணமென்னும் தேன் ஊறும்
கண்ணில் குளிர்காலம் 
நெஞ்சில் வெயில்காலம்
அன்பே எந்நாளும் நான் உந்தன் தோழி
பண்பாடி கண்மூடி
உனது மடியில் உறங்கும் ஒரு கிளி

மூடிவைத்த பூந்தோப்பு 
காலம் யாவும் நீ காப்பு
இதயம் உறங்காது 
இமைகள் இறங்காது
தேனே கங்கைக்கு ஏனிந்த தாகம்
உல்லாசம் உள்ளூறும் 
நதிகள் விரைந்தால் கடலும் வழிவிடும்

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.