Song lyrics

Enveetu Thotthil Lyrics

என் வீட்டு தோட்டத்தில் பாடல் வரிகள்

Last updated Jul 17, 2026

Music
A. R. Rahman
Year
1993
Singers
S. P. Balasubramaniam, Sujatha Mohan
Lyricist
Vairamuthu
Enveetu Thotthil

Lyrics

Enveetu Thotthil Lyrics

பெண் : என் வீட்டு தோட்டத்தில் பூவெல்லாம் கேட்டுப்பார்
என் வீட்டு ஜன்னல் கம்பி எல்லாமே கேட்டுபார்
என் வீட்டு தென்னங்கீற்றை இப்போதே கேட்டுபார்
என் நெஞ்சை சொல்லுமே

பெண் : என் வீட்டு தோட்டத்தில் பூவெல்லாம் கேட்டுப்பார்
என் வீட்டு ஜன்னல் கம்பி எல்லாமே கேட்டு பார்
என் வீட்டு தென்னங்கீற்றை இப்போதே கேட்டு பார்
என் நெஞ்சை சொல்லுமே

***

ஆண் : வாய்பாட்டு பாடும் பெண்ணே மெளனங்கள் கூடாது
வாய் பூட்டு சட்டமெல்லாம் பெண்ணுக்கு ஆகாது

பெண் : வண்டெல்லாம் சத்தம் போட்டால் பூஞ்சோலை தாங்காது
மொட்டுக்கள் சத்தம் போட்டால் வண்டுக்கு கேக்காது

ஆண் : ஆடிக்கு பின்னாலே காவேரி தாங்காது

பெண் : ஆளான பின்னாலே அல்லி பூ மூடாது

ஆண் : ஆசை துடிக்கின்றதோ

ஆண் : உன் வீட்டு தோட்டத்தில் பூவெல்லாம் கேட்டுப்பார்
உன் வீட்டு ஜன்னல் கம்பி எல்லாமே கேட்டுபார்
உன் வீட்டு தென்னங்கீற்றை ஒவ்வொன்றாய் கேட்டுபார்
என் பேர் சொல்லுமே

{ஆண் : உன் வீட்டு தோட்டத்தில் பூவெல்லாம் கேட்டுப்பார்
உன் வீட்டு ஜன்னல் கம்பி எல்லாமே கேட்டுபார்

பெண் : ம்...ஹு....ம்....ஹு...ம்....} (Over lap)

ஆண் : உன் வீட்டு தென்னங்கீற்றை ஒவ்வொன்றாய் கேட்டுபார்
என் பேர் சொல்லுமே

***

பெண் : சொல்லுக்கும் தெரியாம சொல்லத்தான் வந்தேனே
சொல்லுக்குள் அர்த்தம் போல சொல்லாமல் நின்றேனே

ஆண் : சொல்லுக்கும் அர்த்ததுக்கும் தூரங்கள் கிடையாது
சொல்லாத காதல் எல்லாம் சொர்க்கத்தில் சேராது

பெண் : எண்ணிக்கை தீர்ந்தாலும் முத்தங்கள் தீராது

ஆண் : எண்ணிக்கை பார்த்தாலே முத்தங்கள் ஆகாது

பெண் : ம்..ஹு..ம் அனுபவமோ

ஆண் : அஹ்ஹஹா...

பெண் : என் வீட்டு தோட்டத்தில் பூவெல்லாம் கேட்டுப்பார்
என் வீட்டு ஜன்னல் கம்பி எல்லாமே கேட்டுபார்
என் வீட்டு தென்னங்கீற்றை இப்போதே கேட்டுபார்
என் நெஞ்சை சொல்லுமே

{ஆண் : உன் வீட்டு தோட்டத்தில் பூவெல்லாம் கேட்டுப்பார்
உன் வீட்டு ஜன்னல் கம்பி எல்லாமே கேட்டுபார்

ஆண் : உன் வீட்டு தென்னங்கீற்றை ஒவ்வொன்றாய் கேட்டுபார்

பெண் : ம்...ஹு....ம்....ஹு...ம்...} (Over lap)

இருவர் : என் பேர் சொல்லுமே

People

Related People

6 people