ஆண்டே நூற்றாண்டே பாடல் வரிகள்

Movie Name
Mugavaree (2000) (முகவரி)
Music
Deva
Year
2000
Singers
Naveen
Lyrics
Vairamuthu
ஆண்டே நூற்றாண்டே உள் வானம் நூற்றாண்டே
வையகம் வாழவிடு கொஞ்சம் வாசலில் கோலமிடு

வெப்பம் இல்லாமல் புது வெளிச்சம் நீ தரவா
வெள்ளம் இல்லாமல் மழை மேகம் நீ தரவா
அலைகள் இல்லாமல் மேக செதுக்கல் நீ தரவா
இரைச்சல் இல்லாமல் காதில் இன்னிசை நீ தரவா
நிலவுக்கு போய் வரவே எங்கள் தேகத்துக்கு சிறகு கொடு
ஒவ்வொரு விடியலிலும் நெஞ்சை உலகுக்கு வலிமை கொடு

நூற்றாண்டே நூற்றாண்டே நோய்கள் எல்லாம் கலைவாயா
அழுக்கில்லாத காற்றும் நீரும் அகிலம் முழுதும் தருவாயா
பெட்ரோலும் தீர்ந்துவிட்டால் கற்காலம் தருவாயா
பொன்னான வாகனம் ஓடும் பொற்காலம் தருவாயா
ஒரே நிழல் ஒரே நிஜம் நீ கொண்டு வா நீ கொண்டு வா
ஒரே பகல் ஒரே நிலை நீ கொண்டு வா நீ கொண்டு வா
பொய்யே பேசாத புத்துலகம் நீ கொண்டு வா
பசி இல்லா பொய் சொல்லாத புது உலகம் நீ கொண்டு வா
ஒரு பூகம்பம் எங்கும் நேராத அனல் பூமியை நீ கொண்டு வா

இல்லறத்தில் பெண்களுக்கு இன்பநிலை தருவாயா
சமையல் அறை வழிந்த வீடுகள் தாய்மாருக்கெல்லாம் தருவாயா
பொதி சுமக்கும் குழந்தைகளின் புத்தகங்கள் குறைப்பாயா
பரீட்சையின்றி கல்வியும் வேண்டும் பாடத்திட்டம் தருவாயா
ஒரே மொழி ஒரே நீதி நீ கொண்டு வா நீ கொண்டு வா
ஒரே நிழல் ஒரே விழா நீ கொண்டு வா நீ கொண்டு வா
போரே இல்லாத பொன் உலகம் நீ கொண்டு வா
தமிழ் சாகாமல் மனம் பார்க்கின்ற அந்த காதல் நீ கொண்டு வா
இசை கேக்காமல் கண் துகிலாத அட உலகம் நீ கொண்டு வா

புத்தம் புது ஆண்டே தேன் பூக்கும் நூற்றாண்டே
பூக்கள் நீ தரவா தேன் புன்னகை நீ தரவா
போர்க்களம் நுழைந்துவிடு அங்கே பூச்சரம் நட்டுவிடு
அணுகுண்டு அத்தனையும் பசிபிக் கடலில் கொட்டிவிடு
மனிதர்கள் விரும்பும்வரை மண்ணில் மனிதரை வாழவிடு
மருத்துவம் இல்லாமல் எங்கள் மானுடம் வாழவிடு
நிலவுக்கும் போய் வரவே எங்கள் தொண்டுக்கு நிறகு கொடு
ஒவ்வொரு விடியலிலும் நெஞ்சை உலகுக்கு வலிமை கொடு

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.